புதுவிதமான கிரைம் திரில்லர்! தேஜாவு திரைவிமர்சனம்!

Dejavu Review: நடிகர் அருள்நிதி நடிப்பில் புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள தேஜாவு படம் ஜுலை 21ம் தேதி திரைக்கு வர உள்ளது.  

Written by - RK Spark | Edited by - Melwin S | Last Updated : Jul 22, 2022, 09:25 AM IST
  • அருள்நிதி நடித்த தேஜாவு படம் நாளை வெளியாக உள்ளது.
  • அருள்நிதியின் இந்த படமும் திரில்லர் ஜானரில் உருவாகி உள்ளது.
  • சமீபத்தில் டிபிளாக் படம் வெளிவந்து இருந்தது.
புதுவிதமான கிரைம் திரில்லர்! தேஜாவு திரைவிமர்சனம்! title=

படத்தின் ஒன்லென்: படத்தில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகின்றனர். அதில் ஒருவர் மட்டும் போலீசில் இருந்து தப்பிக்க அவன் யார் அவன் எவ்வாறு தண்டிக்க படுகிறான் என்பதே கதை.  டிஜிபி ஆஷாவின் (மதுபாலா) மகளை ஒரு கும்பல் கடத்திவிடுகின்றனர். அது மீடியாக்களுக்கு தெரிந்து அதை பெரிதுபடுதுகின்றனர். மேலிடத்தில் இருந்து கடத்தல் சம்பவத்தை மறைக்க பார்க்கின்றனர். டிஜிபி ஆஷா அதற்க்கு தனிபிரிவு போலிஸ் ஆப்பிஸர் நியமிக்கிறார். அதன்படி  போலிஸ் அதிகாரியாக விக்ரம் குமார் (அருள் நிதி) எண்ட்ரி.  போலிஸ் அதிகாரியாக அருள் நிதி தனது விசாரணையை தொடங்கி, எழுத்தாளராக வரும் அசியுத்யிடம் விசாரணையை தொடங்குகிறார். அசியுத் எழுதும் கதைகள் நிஜத்தில் நடப்பது போல் காட்சிகள் இருக்கும். விக்ரம் குமார் இந்த விசாரனையில் டிஜிபி ஆஷா மகளை கண்டுபிடிக்கிறாரா? யார் அந்த கடத்தல் கும்பல்? டிஜிபிக்கும் கடத்தல் கும்பல்க்கும் இருக்கும் தொடர்பு என்ன? அருள் நிதி ஏன் இந்த விசாரனைக்கு வந்தார் அவருகும் கடத்தல் கும்பல் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை. 

dejavu

மேலும் படிக்க | கழட்டிவிட்ட விஜய்! இரண்டு சூப்பர் ஸ்டார்களை இயக்கப்போகும் ஏஆர் முருகதாஸ்!

 அறிமுக இயக்குனர் அரவிந்த் மிகவும் சிறப்பாகவே தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் வரும் திரில்லர் காட்சிகள் அதிகமாக சஸ்பன்ஸ் நிறைந்த கதையாக உருவாக்கியுள்ளார். படத்தின் ஒளிபதிவுவும், இசையும் கூடுதல் பலம் என்று சொல்லாம். பி.ஜி.முத்தையா தனது ஒளிபதிவை அழாகாக காட்சிபடுத்த பின்னணி இசையில் ஜிப்ரானும் அசத்தியுள்ளனர். படத்திற்க்கு ஏற்ப பின்னணி இசையும் கதை நகர்த்தி செல்கிறது. படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகளை தவிர்த்த இயக்குனர் அரவிந்த் படத்தை சுவாரசியம் குறையாமல் இயக்கிருகிறார். படம் பார்க்கும் பொழுது அதன் குறைகள் பெரிதாக வெளிபடவில்லை என்பதே நிதர்சனம்.

படத்தில் அருள் நிதி தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் விறுவிருப்பாக நகர்ந்து செல்கிறது. அருள் நிதி தேர்வு செய்யும் கதைகள் சற்று மாறுபட்டே இருக்கும் அதே போல் இந்த படத்திலும் எதுவும் குறையாமல் பார்த்து கொண்டுள்ளார். திரில்லர் சஸ்பன்ஸ் கதைகளில் அருள் நிதி இந்த படம் ஒரு வெற்றி தான்.  மதுபாலா டிஜிபி தனது நடிப்பில் அசத்தியுள்ளார். மதுபாலாவிற்க்கும் இந்த படம் வெற்றி தான். அசியுத் எழுத்தாளராக மிகவும் சரியாக நடித்து இருக்கிறார் மற்றும் நடிகர் காளி வெங்கட் போலிஸ் ஆக நடித்து இருப்பார், அவருடைய காமெடி காட்சிகளை ரசிகர்களை சிரிக்க வைத்தது என்று சொல்லாம்.  இயக்குநர் படத்திற்க்கு முன்னாள் பத்திரிக்கையாளராக இருந்துள்ளார். 

dejavu

படத்தி ஒரு சில காட்சிகளில் இப்பொழுதும் பத்திரிக்கையாளராக இருக்கும் சிலரை படத்தில் நடிக்க வைத்துள்ளார் அதற்கு அவர்க்கு பாரட்டுக்கள்.  படம் திரில்லர் ஜானரில் இருக்கிறது அதானல் படம் பார்ப்பதற்க்கு மிகவும் நன்றாகவும் விறுவிருப்பாக இருக்கிறது. இந்த மாதிரி கதை அம்சங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளது என்றாலும் இந்த படம் சற்று மாறுதல் தான். படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ கூடிய வகையில் இருப்பது படத்திற்க்கு கிடைத்த வெற்றி.

மேலும் படிக்க | தலைவரே! தலைவரே! விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News