சென்னையில் நடைபெற்று வரும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.


ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தேர்தல் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கிடையே நடைபெற்று வருகிறது. தமிழ் திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் தங்களது அடையாள அட்டையை தேர்தல் அதிகாரியிடம் காட்டி வாக்களித்து வருகின்றனர்.


ரஜினிகாந்த் தனது அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கினை பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் வாக்களித்து வருகின்றனர்.


தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.