கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ. இந்த படத்திற்கான ப்ரெஸ் மீட்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ப்ரெஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படம் வெளியிடுவதற்கு பெரிதும் போராடியதாகவும் மற்றும் சிலர் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் தமிழ் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷாலிடம் சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்து கேட்டபொழுது:- சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். சக நடிகனாக நான் அவருக்கு துணை நிற்கிறேன். இதுதொடர்பாக, நடிகர் சங்கத்திலும் புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். மேலும் சிவகார்த்திகேயன் போன்று ஒருகாலத்திலும் நானும் பிரச்சினைகளை சந்திதேன் என்று பேசினார். 


இந்த பிரச்சினை குறித்து சிம்பு கூறியதாவது:- கவலைப்படாதே சிவா, இந்த பிரச்சினை உனக்கு மட்டும் நேர்ந்துவிடவில்லை. இந்த மாதிரி பிரச்சினை செய்பவர்வள் யார் என்று எனக்கும் தெரியும்.பிரச்சினை செய்கிறவர்களுக்கு அது மட்டும்தான் செய்யத் தெரியும். நம்முடைய குறிக்கோள் கடின உழைப்பு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் கடவுளிடம் விட்டுவிடு, அவர் பார்த்துக் கொள்வார் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.