சூர்யாவும் பாண்டிராஜும் இணைந்து ஒரு படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. சூர்யாவின் 40 வது படமான இந்த படம் #சூரியா40 என குறிப்பிடப்படுகிறது. மேலும் இதை கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்தாண்டு தினத்தன்று, தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ​​இயக்குனர் பாண்டிராஜ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் #Suriya40 பற்றிய சில விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.



2021 அனைவருக்கும் ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று உறுதியளித்த இயக்குனர், "உங்கள் எதிர்பார்ப்புகளையும் விருப்பத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்கும். இரண்டு முக்கியமான வேடங்களுக்கு நடிகர்களை நாங்கள் தேர்வு செய்தவுடன், இரண்டு முதல் மூன்று வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும். அதுவரை காத்திருப்போம்.” என்று எழுதினார்.


#Suriya40, சூரியாவும் தேசிய விருது பெற்ற திரைப்படத் இயக்குனரான பாண்டிராஜும் (Pandiraj) இணைந்து பணிபுரியும் இரண்டாவது படமாகும். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாண்டிராஜின் பசங்க 2 படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். 


ALSO READ: தளபதி விஜயின் Master தியேட்டர் கலாச்சாரத்தை மீட்டெடுக்குமா? தனுஷ்


சூர்யாவின் (Suriya) 40 ஆவது படம் இயக்குனரின் சமீபத்திய படங்களின் வரிசையில் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியராஜின் இயக்கத்தில் கார்த்தி (Karthi) நடித்த பிளாக்பஸ்டர் படமான கடைகுட்டி சிங்கம் மற்றும் சிவகார்த்திகேயனுடன் பாண்டியராஜ் இணைந்து பணியாற்றிய ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகியவை மாபெரும் வெற்றியடைந்த குடும்ப பொழுதுபோக்கு படங்களாகும்.


அந்த படங்களைப் போலவே இந்த படத்தின் கதையமைப்பும் கிராமப்புறத்தில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நவம்பர் 2020 இல், கார்த்தியின் சுல்தானில் தமிழில் அறிமுகமான டோலிவுட் மற்றும் கன்னட படங்களில் புகழ் பெற்ற ரஷ்மிகா மந்தணா, இந்த படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிப்பார் என்ற ஊகம் பரவியது. இருப்பினும், அந்த நேரத்தில் இயக்குனர் ட்வீட் செய்து, படத்திற்கான நடிகர் நடிகையர் தேர்வு இன்னும் இறுதிபடுத்தப்படவில்லை என்று கூறினார்.


"அன்புள்ள நண்பர்களே, #Suriya40 படம் பற்றிய உங்களது ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். தயவுசெய்து வதந்திகளை நம்ப வெண்டாம். தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் நடிகர்களையும் குழுவினரையும் பற்றி விரைவில் அறிவிக்கும். நாங்கள் உங்களுக்கு சிறந்த படத்தை வழங்க கடுமையாக உழைத்து வருகிறோம்” என்று பாண்டிராஜ் கூறியிருந்தார்.


ALSO READ: விஜய் சேதுபதியின் Bollywood entry படம் பற்றிய ஒரு சூப்பர் அப்டேட்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR