தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். சூர்யாவின் 43ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா படப்பிடிப்பில் பிசியாக சூர்யா:


சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கங்குவா’ திரைப்படம். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. இந்த படத்தின் ராஜா காலத்து கதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. சூர்யா இந்த படத்திற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். 


சுதா கொங்கராவுடன் மீண்டும் இணையும் சூர்யா:


சூர்யாவை வைத்து சூரரைப்போற்று’ படத்தை இயக்கியவர், சுதா கொங்கரா. இவர், சூர்யாவின் 43ஆவது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு படத்தில் இணைவது குறித்து பேசியதாகவும் சுதா கொங்கரா கூறிய கதைக்கு சூர்யா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | இணையத்தில் லீக் ஆன ஜவான் HD ப்ரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழு!


இவர்தான் ஜோடியா..?


மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகளுள் ஒருவர் நஸ்ரியா. சினிமாவில் நடித்தது சில காலம்தான் என்றாலும் ரசிகர்கள் அனைவரையும் தனது கள்ளம் கபடமற்ற சிரிப்பால் ஈர்த்துவிட்டார். இவர், நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த அவர், டாப் ஹீரோயினாக இருந்த போது அப்படியே நடிப்பில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து ‘ட்ரான்ஸ்’ என்ற படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் வெளியான ‘அண்டே சுந்தரநிக்கி’ படத்தில் நடித்தார். ஆனால், இவர் தமிழ் படங்களில் நடித்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டன. இதையடுத்து இவர், சூர்யாவின் 43ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 


இந்த மலையாள நடிகரும் இருக்கிறாரா..?


மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்மூட்டியின் மகனான இவர், தமிழில் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர், தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் என்று அடிக்கடி நேர்காணல்களில் கூறுவதுண்டு. அதிலும், சூர்யாவை ‘அண்ணா’என்றுதான் அழைப்பார். இவரும் சூர்யாவின் 43ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. 


சுதா கொங்கரா கூறியது என்ன..?


சுதா கொங்கரா கடைசியாக ‘சூரரைப்போற்று’ படத்தை இயக்கினார். அதன் பிறகு இவர் இந்தியில் அதே படத்தை ரீ-மேக் செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரது அடுத்த படம் குறித்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அப்போது சூரரைப்போற்று படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த படம் மிகவும் பெரிய பட்ஜெட் என்று கூறினார். மேலும், இந்த படம் யாருடைய வாழ்க்கை வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ