கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, அதிலும் குறிப்பாக கமல் எழுதி, பாடிய பாடல் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பாடலின் வரிகள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.  தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே 2010ம் ஆண்டு கமல், மாதவன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில், மீண்டும் கமல் படத்தில் நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்


முன்னர் வெளியான தகவல்களின்படி, விக்ரம் படத்தில் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.  37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கமலுடன் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும், படத்தின் க்ளைமேக்ஸில் இவரது காட்சி இடம்பெற்று இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.  1986-ல் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும் என்றும், இந்த படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி நாராயணன், மஹேஸ்வரி, நந்தினி போன்ற பலர் நடித்துள்ளனர்.  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜூன்-3ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.  மேலும் சூர்யா அவன் இவன் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பார்.  



மேலும் படிக்க | பத்தல பத்தல... வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR