நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகன் தேவ் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என வெளியான தகவல் பொய் என 2D Entertainment நிறுவனம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுல் ஒருவரான சூர்யாவின் மகன் தேவ், அவரது தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment மூலம் அடுத்ததாக உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் பொய் என 2D Entertainment நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.



தமிழ் திரையுலகில் பிரபலங்களின் வாரிசுகள் திரைக்கு வருவது புதிதல்ல, தொன்றுதொட்டு வரும் இந்த வழக்கத்தில் சமீபத்தில் இணைந்தவர் சியான் விக்ரமின் மகன் துருவ். இயக்குநர் பாலா இயக்கும் வர்மா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.



இந்நிலையில் சமீபத்தல் நடிகர் சூர்யாவின் மகன் தேவ், திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றார் என தகவல்கள் வெளியானது. காரணம் 2D Entertainment நிறுவனம் சமீபத்தில் தங்களது நிறுவனம் மூலம் தயாராகவுள்ள திரைப்படத்திற்கு 6-8 வயது குழந்தைகள் தேவைப்படுதவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினை அடுத்து, இப்படம் குழந்தைகளை மையப்படுத்திய படமாக இருக்கலாம் எனவும், இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் தேவ் நடிக்கலாம் எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த தகவல் பொய்யானது என 2D Entertainment நிறுவன இயக்குநர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.