மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’
சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜெய்பீம், சூரரைப்போற்று என கடைசியாக வெளியான இரண்டு படங்களும் மெகாஹிட் கொடுத்த சூர்யா, அடுத்தாக ’எதற்கும் துணிந்தவன்’ (EtharkkumThunindhavan) படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ALSO READ | சூர்யாவுடன் நேரடியாக மோதவுள்ள பிரபல நடிகர்
இந்தப் படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்தில் விளிம்பு நிலை மக்களான குறவர் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகளைக் காட்சிப்படுத்திய சூர்யா, எதற்கும் துணிந்தவனில் குடும்ப கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் சமூகம் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்து கருத்துள்ள படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் பாண்டிராஜ் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி, எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவின் ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ALSO READ | Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?
சூர்யாவின் கடந்த இரு படங்களையும் தியேட்டர்களில் பார்த்து ரசிக்க முடியாமல் இருந்த அவரது ரசிகர்கள், இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாட எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR