தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். அவர் கடைசியாக நாச்சியார் படத்தை இயக்கினார். அதற்கு அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை விக்ரம் மகன் துருவ்வை வைத்து இயக்கினார். ஆனால் அது தயாரிப்பு தரப்புக்கு திருப்தி அளிக்காததால் பாலா எடுத்த படத்தை ரிலீஸ் செய்யாமல் வேறு ஒரு இயக்குநரை இயக்க வைத்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சம்பவம் பாலாவின் கேரியரில் கரும்புள்ளியாகவே பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்னை தலையெடுக்க அவர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் பாலா சூர்யாவை வைத்து படம் இயக்க கமிட்டானார்.



பிதாமகன் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் மீனவர் பிரச்னையை மையமாக வைத்து உருவாகிறது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.


மேலும் படிக்க | ரஜினி மற்றும் தோனியை ரொம்ப பிடிக்கும்! ஊர்வசி ரவுடேலா!


கன்னியாகுமரியில் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கும் என கூறப்பட்டது. அதேசமயம் சூர்யாவுக்கும், பாலாவுக்கு பிரச்னை ஏற்பட்டதால் படம் ட்ராப்பாகிவிட்டது என்ற தகவலும் வெளியானது.


 



இதனை மறுக்கும் விதமாக பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் ஷூட்டிங்குக்கு திரும்ப ஆவலோடு இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனால் பாலா - சூர்யா படம் ட்ராப் என்ற வதந்தி முடிவுக்கு வதிருக்கிறது.


அடுத்தக்கட்டமாக படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலைஇல் படத்துக்கு ‘வணங்கான்’ அல்லது ‘கடலாடி’ என பெயர் வைக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பாக வெலியிடப்பட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க | ரூல்ஸ் மீறப்படும்... விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கேரக்டர் பெயர் என்ன?.. வெளியானது அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR