சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. அண்மையில் ரிலீஸான இந்தப் படம் வெற்றி நடைபோடுகிறது. ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்த சூர்யாவுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் படங்களை வெளியிடமாட்டோம் எனவும் வெளிப்படையாக அறிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராஷ்மிகாவின் நியூ லுக் – மெர்சலான ரசிகர்கள்


ஆனால், சன்பிக்சர்ஸ் நடிப்பில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் வெற்றிகரமாக தியேட்டர்களில் ரிலீஸாகி, பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல கலெக்ஷைனை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. சூர்யா 41 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியாக உள்ளது. யக்குநர் பாலாவும் - சூர்யாவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து பணியாற்றுகின்றனர். 



அவர்கள் காம்பினேஷனில் வெளியான நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. சூர்யாவின் கேரியரில் மிக முக்கிய படமாக நந்தா அமைந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் சேரவில்லை. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு புதிய படத்திற்காக இப்போது இணைந்துள்ளனர். முழுக்க பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக சூர்யா 41 உருவாக உள்ளது. திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட உள்ளன. 


மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!


சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் நாயகியாக ஷ்யாம் சிங்க ராய் புகழ் கிருத்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்ற உள்ளார். பரதேசிக்குப் பிறகு இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ், பாலாவுடன் இணைந்து பணியாற்றவுள்ள இரண்டாவது படம் இதுவாகும். சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR