சூர்யாவின் மார்க்கெட் தற்போது உட்சத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முன்பு கமர்ஷியல் சினிமாக்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா, அண்மைக்காலமாக சமூகத்தில் இருக்கும் ஏதாவதொரு பிரச்சனையை மையப்படுத்திய படங்களை எடுத்தும் தயாரித்தும் வருகிறார். இப்போது பாலாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா 41 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், கன்னியாக்குமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாலாவுடனான பிரச்சனையால் கைவிடப்படுகிறதா சூர்யா 41?


மீனவர்களின் பிரச்சனையை மையமாகக்கொண்டு படம் உருவாகிறது. முதல் கட்டப் படப்பிடிப்புகள் கன்னியாக்குமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.



இதற்கிடையே, இயக்குநர் சிவாவுடன் அடுத்தப் படத்தில் சூர்யா இணைய இருக்கிறார் என கூறப்பட்டதால், ஒருவேளை சூர்யா மற்றும் பாலா இடையேயான பிரச்சனை உண்மையாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் எண்ணத் தொடங்கினர். மேலும், சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலும் வெளியாகாததால் படம் கைவிடப்பட்டுவிட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வதந்திகள் பலவாறாக உலாவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யா. டிவிட்டரில் சூர்யா 41 தளத்தில் இயக்குநர் பாலாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள சூர்யா, விரைவில் சூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | விக்ரம் 3 - இந்தியன் 2 அப்டேட்டை கொடுத்த கமல்ஹாசன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR