மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை... வியக்க வைக்கும் கெமோமில் டீ..!!

Chamomile Tea: காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் தேநீர் தற்போது பிரபலமாகி வரும் ஒரு பானமாகும். ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதனை, பலர் பிளாக் அல்லது கிரீன் டீக்கு பதிலாக பருகி வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2024, 12:11 PM IST
  • உங்கள் உணவில் கெமோமில் தேநீரை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • கெமோமில் தேநீர் மன பதட்டத்தை போக்குவதோடு, செரிமானத்திற்கு உதவுகிறது.
மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை... வியக்க வைக்கும் கெமோமில் டீ..!! title=

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நம் மனதை ரிலாக்ஸ் செய்து, நாள் முழுவதும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் உணவுகள் மற்றும் பானங்கள் அருந்த நம்மில் பலர் விரும்புகிறோம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் பலருக்கு, டீ மற்றும் காபி போன்ற பானங்களை விட, காஃபின் இல்லாத இனிப்பு சுவை நிறைந்த கெமோமில் டீ மிகவும் பிடித்தமான பானமாக பிரபலமாகி வருகிறது. 

டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது தூக்கமின்மை உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்த உதவுவதோடு, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கெமோமில் டீ, சிறந்த தேர்வாக இருக்கும்.

கெமோமில் தேநீர் மன பதற்றத்தை போக்குவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. கெமோமில் என்பது சூரியகாந்தி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மன பதற்றத்தைத் போக்கவும், குடல் தொடர்பான பிரச்சனைகளை போக்கவும் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கெமோமில் தேநீர் ஒரு மிதமான இனிப்பு சுவையுடன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

உங்கள் டயட்டில் கெமோமில் தேநீரை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது

கெமோமில் தேநீர் பருகுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்க உதவும். தேநீரில் அபிஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. இவை மூளை நரம்புகளை அமைதிபடுத்தி பதற்ற உணர்வுகளைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும்

கெமோமில் டீ உயர் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதோடு (BP Control) மட்டுமல்லாமல், மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் உதவும். இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை தளர்த்தி இதய ஆரோக்கித்திற்கு நன்மை பயக்கும். கெமோமில் பூக்கள் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் உள்ளது. 

தூக்கமின்மை பிரச்சனைக்கு மருந்தாகும் கெமோமில் 

கெமோமில் தேநீரில் உள்ள மனதை அமைதிபடுத்தும் பண்புகள் பதற்றத்தைத் தணிக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த வழிவகுக்கும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள், இதனை இரவில் அருந்துவது பலன் தரும்.

மேலும் படிக்க | எந்த பாத்திரத்தில் சமைச்சாலும் ‘இந்த’ உணவுகளை இரும்புச்சட்டியில் சமைக்க வேண்டாம்!!!

நோய் எதிப்பு சக்தி

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, கெமோமில் தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும். இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாத்து, ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகின்றன.

செரிமான கோளாறுகளை நீக்கும்

கெமோமில் தேநீர் பாரம்பரியமாக அஜீரணம், வீக்கம் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சினைகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது குடல் தசைகளை தளர்த்த உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை போக்குகிறது.

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகளை அனுபவிக்கும் பெண்கள் கெமோமில் தேநீர் அருந்துவது நிவாரணம் பெற உதவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கருப்பை தசைகளை தளர்த்தவும், மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
 
கெமோமில் தேயிலை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை தொடர்ந்து உட்கொள்வது சரும எரிச்சலைத் தணிக்கவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவும் என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

கெமோமில் தேநீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே நீரிழிவு நோயாளிகள் அல்லது உயர் இரத்த சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கெமோமில் தேநீரை வழக்கமாக உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Side Effects of Pistachio: பிஸ்தா பருப்பு... ‘இந்த’ பிரச்சனை இருந்தா விலகியே இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News