`Me Too` லீலா மணிமேகலை, சின்மயிக்கு நீதிமன்றம் விதித்த தடை
இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீலா மணிமேகலை மற்றும் சின்மயிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2018 -ல் ‘Me Too' என்ற ஹேஸ்டேக்கில் பிரபலமான பெண்கள், அதாவது சினிமாத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக கருத்து பதிவிட்டனர். கவிஞர் லீலா மணிமேகலையும், இயக்குநர் சுசிகணேசனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ALSO READ | நடிகர் விஜய் 7 ஆண்டுகள் மனைவியை பிரிந்திருந்தாரா? ஒரு ரசிகனின் குரல்
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சுசிகணேசன் புதிதாக இயக்கும் தமிழ் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார். இந்த தகவலை அறிந்த லீலா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோர் மீண்டும் சுசிகணேசன் குறித்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுசிகணேசன், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சின்மயி மற்றும் லீலா மணிமேகலை வெளியிட தடை விதிக்கக்கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
ALSO READ | வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ், வைரலாகும் போட்டோ
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லீலா மணிமேகலை மீது தொடர்ந்த கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய இயக்குநர் சுசிகணேசன் தரப்பு, தன்னை பழிவாங்கும் நோக்குடனும், திரைத்துறையில் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் லீலா மணிமேகலை, சின்மயி செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி, சுசிகணேசன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, அவர் குறித்து அவதூறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட சின்மயி மற்றும் லீலா மணிமேகலைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார். இதேபோல், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் தி நியூஸ் மினிட் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR