பாலிவுட் திரையுலகில், 2000 ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர், காயத்ரி ஜோஷி. இவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஸ்வேட்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த சில மாதங்களுக்கு பிறகு அவர் தொழிலதிபரான விகாஸ் ஓப்ராயை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலை விபத்து:


நடிகை காயத்ரி ஜோஷி தற்போது தனது குடும்பத்தினருடன் இத்தாலியில் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் பயணித்த போதுதான் அந்த விபத்து நேர்ந்துள்ளது. இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பெரிய விபத்தில் காய்த்ரி ஜோஷி மற்றும் அவரது கணவர் விகாஸ் ஓப்ராய் ஆகியோரும் சிக்கியுள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள காயத்ரி ஜோஷி, “கடவுளின் அருளால் நானும் எனது கணவரும் பத்திரமாக நலமுடன் உள்ளோம்” என்று கூறியுள்ளார். 



லம்போகினி, ஃபெராரி போன்ற உயர்திறன் செயல்கள் கொண்ட கார்கள் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால், ஃபெராரி வாகனத்தில் இருந்து தீ பரவியுள்ளது. இந்த கோர விபத்தில் வயது மூத்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பெயர் மெலிசா க்ரௌடி (63) என்பதும் க்ரெளடி (67) என்பதும் தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ