நடிகை ஸ்ரீதேவி-க்கு சிலைவைத்து கவுரவித்த சுவிட்சர்லாந்து....
நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை...!
நடிகை ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் அவருக்கு சிலை...!
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.
முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தி பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் யாஷ் சோப்ரா. இவரது தயாரிப்பில் 1995 ஆம் ஆண்டு ‘திர்வாலே துல் ஹனியா லேஜாயங்கே’ என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்.
இது தவிர, இவருடைய இயக்கத்தில் பல்வேறு படங்கள் சுவிட்சர்லாந்தில் படமானது. இதனால் அதிக அளவில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர். எனவே அவருக்கு சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டு அரசு சிலை அமைத்தது. இது தவிர ரெயிலுக்கும், ஏரிக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்படுகிறது. அந்த நாட்டு அரசு இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.
மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.