விரைவில் திருமணம் செய்யப்போகும் தமன்னா! மாப்பிள்ளை யாரு தெரியுமா?
நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை தொடர்ந்து நடிகை தமன்னா திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் இப்போது திருமண பந்தத்தில் இணைந்து வருகின்றனர். காஜல் அகர்வால் தொழிலதிபரை மணந்து செட்டிலானார். அவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. அவருக்குப் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம்பிடித்தார். இப்போது ஹன்சிகாவும் திருமண உறவில் காலடி எடுத்து வைக்க இருக்கும் நிலையில், நடிகை தமன்னாவின் திருமணம் குறித்த அப்டேட் சுடச்சுட வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க | எனக்கு குழந்தை பிறந்தால்...விஜே மணிமேகலையின் ஓபன் டாக்
தமன்னா மும்பையைச் சேர்ந்தவர். ஆனால் இவர் கோலோச்சியது எல்லாம் தென்னிந்திய சினிமாவில் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் 5 ஹீரோயின்கள் லிஸ்டில் இருக்கிறார். மிகவும் பிரபலமாக இருந்தாலும் அவருக்கான பட வாய்ப்புகள் சமீப காலமாக எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பாகுபலி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் எல்லாம் நடித்த தமன்னாவுக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இப்போது அவ்வளவாக கிடைப்பதில்லை.
அதனால், திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைக்க கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.32 வயதான தமன்னா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளாராம். அவருக்கும், தமன்னாவுக்குமான திருமண அறிவிப்பு விரைவில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.
மேலும் படிக்க | துணிவு டீம் போட்ட ஸ்கெட்சில் வசமாக சிக்கிக் கொண்ட வாரிசு! இப்போதைக்கு இதுதான் நிலைமை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ