எனக்கு குழந்தை பிறந்தால்...விஜே மணிமேகலையின் ஓபன் டாக்

தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் மணிமேகலை, குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் ஆவார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 16, 2022, 12:05 PM IST
  • விஜே மணிமேகலை ஓபன் டாக்.
  • மணிமேகலை சொன்ன விஷயம் வைரலாகிறது.
  • தொகுப்பாளினி, நடிகை, பேச்சாளர் என பல துறைகளை கலக்கல்.
எனக்கு குழந்தை பிறந்தால்...விஜே மணிமேகலையின் ஓபன் டாக் title=

சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை தற்போது விஜய் தொலைக்காட்சியும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சன் மியூசிங் ஆங்கர், விஜே என்பதை எல்லாம் தாண்டி இவர் குக் வித் கோமாளி மணிமேகலை என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது. 

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள இவருக்கு சமூகவலைத்தளத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமில்லை மணிமேகலை தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல் வீடியோக்களும் லட்சங்களில் வியூஸ்களை அள்ளுகிறது. தொகுப்பாளினி, நடிகை, பேச்சாளர் என பல துறைகளை கலக்கிவரும் மணிமேகலை ஹூசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

மேலும் படிக்க | முதல விஜய் பட டைட்டில்...இப்போ விஜய் கூட; கலக்கும் "லவ் டுடே" பட இயக்குனர்

இவரது திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால் கூட தன்னுடைய வீட்டிற்கு செல்வதில்லை. ஆனால் அவரது அம்மா மாற்றும் தம்பியுடன் பேசும் மணிமேகலை திருமணம் செய்ததிலிருந்து அவரது அப்பாவிடம் பேசியதில்லை என்று பேட்டியில் கூறியிருந்தார்.

குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., தனக்கு குழந்தை பிறந்தால் அது விஜய் டிவிக்குத்தான் சொந்தம் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் டிவிக்கு தன்னுடைய குழந்தையை சொந்தமாக்கும் அளவுக்கு மணிமேகலைக்கு டிவி அவ்வளவு நல்லது செய்துள்ளதாம். தற்போது மணிமேகலைக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News