தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து காமெடி நடிகர்களின் உயிர் இழப்பு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோபாலா, மயில்சாமி,  விவேக்,பாண்டு,  கிரேசி மோகன் வடிவேல் பாலாஜி என இந்த வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.இந்நிலையில் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரேசி மோகன்:


தமிழ் சினிமாவின் பிரபலமான எழுத்தாளரும் நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான இருந்தவர்தான் கிரேசி மோகன் . ஆரம்பத்தில் நாடகங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கிய கிரேசி மோகன் 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் சினிமாவில் கால் பதித்தார். நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து சதிலீலாவதி,மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி சில படங்களில்  நடித்தும் இருப்பார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக தனது 67 வது வயதில் காலமானார். 


விவேக்:


சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விவேக் தனது நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். 1990களின் தொடக்கத்தில் துணை நடிகராக தனது பயணத்தை தொடங்கி பின்னர் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றார். புதுப்புது அர்த்தங்கள் ,மின்னலே ,ரன், சாமி ,பேரழகன் ,சிவாஜி போன்ற பல படங்களில் இவரது நகைச்சுவை பேசப்பட்டது.இவர் ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைத்தவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


பாண்டு:


பழம்பெரும்  நகைச்சுவை நடிகரும் குணச்சித்திர நடிகருமான பாண்டு தனது 74 வது வயதில் காலமானார். 1970 ஆம் ஆண்டு மாணவன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். பின்னர் அவர் நடித்த கரை எல்லாம் செண்பகப்பூ படம் அவருக்கு அங்கீகாரத்தை பெற்று தந்தது. தொடர்ந்து பணக்காரன் ,காதல் கோட்டை கோயம்புத்தூர் மாப்பிள்ளை , போக்கிரி பம்மல் கே சம்பந்தம், சிங்கம் என பல படங்களில் நடித்திருந்தார். மேலும் இவருக்கு அதிமுக கட்சியின் சின்னத்தை வடிவமைத்த பெருமையும் உண்டு. இந்நிலையில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக காலமானார்


மேலும் படிக்க | ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்


வடிவேல் பாலாஜி:


சின்னத்திரை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான வடிவேல் பாலாஜி தனது 45 வது வயதில் உயிரிழந்தார். சின்னத்திரையில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் வடிவேல் பாலாஜி. இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பலன் தராததால் கடந்த 2020 செப்டம்பர் 10 ஆம் தேதி வடிவேல் பாலாஜி காலமானார். இவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மயில்சாமி:


தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞர்மான மயில்சாமி தனது 57 ஆவது வயதில் காலமானார். இவர் முதன்முதலாக இயக்குனர் பாக்யராஜின் தாவணி கனவுகள் படத்தின் மூலமாக தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்தவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் அது காலம் கடந்து பலராலும் பேசப்படும் வகையில் இருக்கிறது.தூள்,வசீகரா ,கில்லி ,கில்லி, உத்தமபுத்திரன், வீரம் ஆகிய படங்களில் மயில்சாமியின் நகைச்சுவை மிகவும் பிரபலம். இந்நிலையில் இவர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.


இந்நிலையில் தற்போது இயக்குனர்  குணச்சித்திர நடிகர் காமெடியன் என பன்முக தன்மை கொண்ட மனோபாலாவும் காலமாகி உள்ளார். 69 வயதான இவர், கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்த இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் அதேபோல 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவு திரை உலகினர் ரசிகர்கள் என பலரையும் உச்சகட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க | ‘கூலான லோகேஷ்..தளபதி அடிபொலி’ லியோ குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கூறிய மாத்யூ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ