இளம் வயதுடைய நடிகர்கள் பலர் உயிரிழந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ஒரு இளம் நடிகர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொலைக்காட்சி நடிகர்: 


கர்நாடக மாநிலம் மாண்டய மாவட்டத்தில் வளர்ந்தவர், பவன். இவர், தனது குடும்பத்தினருடன் மும்பையில் தங்கியிருந்தார். இவர் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சின்னத்திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படும் இவர், தற்போது சில தொடர்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருந்தார். இவருக்கு தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் ரசிகர்கள் பலர் உள்ளனர். 


மேலும் படிக்க | கேரளாவில் மாஸ் காட்டும் ரஜினி.. விக்ரம் பட வசூலை மிஞ்சிய ஜெயிலர்


திடீர் மரணம்:


நடிகர் பவன், மும்பையில் தனது வீட்டில் நேற்று (ஆகஸ்டு 18) அதிகாலை நான்கு மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இவருடன் நடித்த பிரபலங்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பவனின் உடல் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 


இரங்கல் தெரிவித்த அரசியல் கட்சி பிரமுகர்கள்:


உயிரிழந்த பவனிற்கு மாண்டியா பகுதி எம்.எல்.ஏ ஹெச்.டி மஞ்சு, முன்னாள் எம்.எல்.ஏ கே.பி சந்திரசேக்ரா, முன்னாள் அமைச்சர் கே.சி நாராயண கௌடா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இளம் வயதில் உயிரிழந்துள்ள நடிகர் பவனிற்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்வதாக ரசிகர்கள் சிலர் இரங்கல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். 


கர்நாடக திரையுலகில் அடுத்தடுத்து இளம் பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், பிரபல கன்னட நடிகர் விஜய ராகவேந்திராவின் மனைவி இளம் வயதில் தாய்லாந்து பயணத்தின் போது மரணமடைந்தார். இவரது மரணமும் மாரடைப்பு காரணாகவே நிகழ்ந்தது. கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் தனது 46ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது உறவினரும் இளம் நடிகருமான சுராஜ் குமாருக்கு விபத்தில் படுகாயம் அடைந்தார். இதில் அவர் காலை இழக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். இப்படி, கன்னட திரையுலகை சேர்ந்த இளம் வயதினர் எதிர்பாராத மரணத்தையும் விபத்தையும் சந்தித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. 


மேலும் படிக்க | “பட வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்..” பிரபல நடிகை தெரிவிக்கும் பகீர் உண்மைகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ