Tamil Directors Who Has Not Given Flop Movies : வெளி உலகின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப, சினிமா உலகமும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ரசிகர்களின் ரசனைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் சிலருக்கு மணிரத்னமின் படங்கள் பிடித்தது, ஆனால் இப்போது அவரது படங்கள் பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். கோலிவுட்டை பொறுத்த வரை, எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும் அவரது பல படங்களில், ஏதாவது ஒன்றாவது தோல்வி அடைந்திருக்கும். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும், அவை பல சமயங்களில் தோல்வி அடையளாம். ஆனால், மாடர்ன் தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் தோல்வியே தராத படங்களை கொடுத்திருக்கின்றனர்.  அவை யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரி செல்வராஜ்:


புரட்சி மிகு இயக்குநராக கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வருபவர், மாரி செல்வராஜ். இவர் முதன் முதலில் இயக்கி வெளிவந்த படம், பரியேறும் பெருமாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் படும் துன்பங்களை பார்ப்பவர் மனம் பாதிக்கப்படும் வகையில் கூறிய மாரி செல்வராஜ், அடுத்து கர்ணன் படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 


கடந்த ஆண்டு, இவர் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விம்ரசனங்களை பெற்றாலும் சரியான சினிமா ரசிகர்களை சென்றடைந்து. வசூலையும் பெற்றது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் ‘வாழை’ படம் வெளியானது. இந்த படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்தவர்கள் மாரி செல்வராஜை முத்தமிட்டு கொண்டாடி வருகின்றனர். 


அட்லீ:


சினிமாவிற்கு வந்த வெகு சில ஆண்டுகளிலேயே டாப்பிற்கு சென்று விட்ட இயக்குநர்களுள் ஒருவர் அட்லீ. ராஜா ராணி படத்தை இயக்கி ஹிட் ஆக்கிய இவர், முதலில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தார். எடுத்த 4 படங்களில் மூன்று படங்கள் விஜய்யை வைத்துதான் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் ஆகியவை நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட் ஆகின. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவர், ஜவான் படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார். இவர் இயக்கிய 5 படங்களில் ஒரு படம் கூட தோல்வி அடையவில்லை. 



மேலும் படிக்க | நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?


லோகேஷ் கனகராஜ்:


நல்ல திரைக்கதை, நல்ல படம் தரும் இயக்குநராக இருந்தவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தை இயக்கி அறிமுகமான இவர், கைதி படம் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தை அடைந்தார். இதையடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தையும், கமலை வைத்து விக்ரம் படத்தையும் இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சளைக்கவில்லை.


மூன்று பேரின் வெற்றிக்கு காரணம் என்ன? 


மாரி செல்வராஜ், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரின் வெற்றிக்கும் ஒரே காரணமாக இருப்பது, அவர்களின் கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் எளிதாக சென்று அடைய முடிகிறது என்பதுதான். மாரி செல்வராஜ், தன் வாழ்விலும் தன்னை சுற்றியும் நடந்த விஷயங்களை இயல்பாக உண்மை மாறாமல் எடுத்து கூறுகிறார். அட்லீ, மாஸ் ஹீரோக்களாக தன் படங்களில் நடிக்க வைத்து, எடுத்த கதையே திரும்ப எடுத்தாலும் அதனை ஓட வைக்கிறார். லோகேஷ் கனகராஜ், தன் படங்களில் சில இடங்களில் தனித்துவமான அம்சங்களை காண்பிப்பதால் வெற்றி இயக்குநராக இருக்கிறார். இந்த நிலை, இனி வருங்காலத்திலும் மாறலாம். 


மேலும் படிக்க | பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ