Director Gajendran Passes Away: டி.பி.கஜேந்திரன் (71) தமிழ் சினிமாவில் 'வீடு மனைவி மக்கள்' என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு எங்க ஊரு காவல்காரன், பாண்டிய நாட்டு தங்கம், மிடில்கிளாஸ் மாதவன் உள்ளிட்ட 27 திரைப்படங்களை இயக்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறர். டி.பி. கஜேந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், டி.பி. கஜேந்திரன். 


மேலும் படிக்க | RIP: நடிகர் இயக்குநர் கே விஸ்வநாத் அமரரானார்! 93 வயதில் மரணித்த திரைநட்சத்திரம்



இந்த நிலையில், இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  அவருடைய மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டி.பி. கஜேந்திரன் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குனராக உயர்ந்தவர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின்  அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், திரையுலகினர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | Vani Jairam passes away: பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ