ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. பீஸ்ட் படத்தில் நெகடிவ் விமர்சனங்களால் பயங்கர அடி வாங்கிய நெல்சன், ஜெயிலர் படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.  இது நெல்சனுக்கு மட்டுமன்றி ரஜினிக்கும் கம்-பேக்காக இருப்பதாக ரசிஅக்ர்கள் கூறிவருகின்றனர். இதே போல, தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குநர்கள் சிலர் தங்களது ஒரு தோல்வி படத்திற்கு பிறகு மாஸான வெற்றி படம் ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த இயக்குநர்களின் லிஸ்டில் யார் யார் உள்ளனர்..? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்சன்:


நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் நெல்சன் திலீப்குமார். டார்க் காமெடி என்ற கதை பாணியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர்களுள் இவரும் ஒருவர். இதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த டாக்டர் படமும் பயங்கர ஹிட் அடித்தது. ஆனால், இதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த பீஸ்ட் படம் நெகடிவ் விமர்சன மழையில் நனைந்தது. இதைத்தொடர்ந்து இவர் கையில் இருக்கும் ஜெயிலர் பட வாய்ப்பு நழுவிவிடுமோ என பலரும் பயந்தனர். ஆனால் அவ்வாறு இல்லாமல், ரசிகர்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் நெல்சன். 


மேலும் படிக்க | ‘போர் தொழில்’ நாயகன் அசோக் செல்வனுக்கு டும் டும் டும்..! மனமகள் இவர்தான்..!


கௌதம் வாசுதேவ் மேனன்:


தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் இயக்குநர் என்று அழைக்கப்படுபவர், கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து சிம்புவை வைத்து இவர் இயக்கியிருந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. ஜனரஞ்சகமான கேங்ஸ்டர் கதையில் காதல், சண்டை என பல விஷயங்களை காண்பித்து ரசிகர்களுக்கு புதுமை காட்டினார் கௌதம். இவர், அடுத்து நடிகர் விக்ரமை வைத்து இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநராக மட்டுமன்றி நடிகராகவும் வெற்றி பெற்று வருகிறார். 


வெங்கட் பிரபு:


‘ஜாலி இயக்குநர்’ வெங்கட் பிரபுவின் படங்கள் குடும்பங்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் நகைச்சுவை மிக்க கதைகளாக இருக்கும். இவர் இயக்கியிருந்து சென்னை 28 திரைப்படம் அவ்வளவாக வரவேற்பினை பெறவில்லை. இதையடுத்து அவர் இயக்கிய மாநாடு இவருக்கு கம்-பேக் கொடுத்தது மட்டுமன்றி சிம்புவிற்கும் இழந்த அவரது பெயரை மீண்டும் பெற உதவியது. இவர் கடைசியாக இயக்கியிருந்த ‘கஸ்டடி’ படம் பெரிதாக வெற்றிபெறவில்லை. தற்போது தளபதி 68 பட வேலைகளில் வெங்கட் பிரபு பிசியாக இருக்கிறார். இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமையும் என்று கருதப்படுகிறது. 


கார்த்திக் சுப்புராஜ்:


முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் இயக்குநர்களுள் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பீட்ஸா, இறைவி, பேட்ட உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை பெற்று ரசிகர்களின் பாராட்டினை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவர், தற்போது ஜிகிர்ந்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை இயக்கியுள்ளார். படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படம் மூலம் கார்த்தீக் கண்டிப்பாக கம்-பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் படங்கள் இயக்குவது மட்டுமன்றி சில படங்களை தயாரித்து வெளியிடவும் செய்துள்ளார். 


மேலும் படிக்க | “ஜெயிலர் படத்தில் ‘இந்த’ பிரபலமும் நடிக்க இருந்தார்” நெல்சன் சொன்ன சூப்பர் தகவல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ