திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் திரைக்கு வெளிவரவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தற்போது செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,


வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரை அரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான KSS Limited தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் E cinema வுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரைஅரங்கங்களுக்கு நேரடியாக கன்டன்ட் (படம்) கொடுக்கப்படும்.