சமீப காலங்களில் மக்கள் ரிலீசுக்குக் காத்திருக்கும் திரைப்படங்களில் ‘தலைவி’ படமும் ஒன்றாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்து சிங்கப் பெண்ணாக, கம்பீரமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை திரையில் காணும் ஆசை அனைவருக்கும் உள்ளது என்பது அவற்றில் ஒரு முக்கிய காரணமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத் கோலிவுட்டுக்கு (Kollywood) ஒரு சக்திவாய்ந்த மறுபிரவேசம் செய்யவுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தின் மூலம் தமிழுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார் கங்கணா ரணௌத் (Kangana Ranaut).


ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று, இப்படத்தில் கங்கணாவின் தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் பகிரப்பட்டது. கருப்பு மற்றும் சிவப்பு கோடுகளுடன் கூடிய ஒரு எளிமையான வெள்ளை நிற சேலையில் வெளிவந்த கங்கணாவின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!


ALSO READ: நடிகை தமன்னாவுக்கு கொரோனா: விரைவில் குணமடைய சீனு ராமசாமி பிரார்த்தனை


தனது சமூக ஊடக அகௌண்டுகளில் இது குறித்த படங்களைப் பகிர்ந்த கங்கணா, “குட் மார்னிங் நண்பர்களே, எனது முற்றிலும் திறமையான மற்றும் மிகவும் பாசமுள்ள இயக்குனர் ஏ.எல். விஜய் ஜியுடன் நடத்திய நேற்றைய அதிகாலை காட்சி விவாதத்திலிருந்து சில ஸ்டில்கள். இந்த உலகில் பல அற்புதமான இடங்கள் உள்ளன. ஆனால் எனக்கு மிகவும் இனிமையான மற்றும் ஆறுதலளிக்கும் இடம் ஷூட்டிங் ஸ்பாட்தான்” என்று எழுதியுள்ளார்.



இதற்கு பதிலளித்தவர்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர்.


விஜய் இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். பல மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை விஷால் விட்டல் கையாளுவார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) குமார் இணைந்துள்ள இப்படத்தின் இணை எழுத்தளாராக உள்ளார் கே.வி. விஜயேந்திர பிரசாத்.


ஹைதராபாத்தில் ஒரு பாடல் படப்பிடிப்புடன் படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று துவங்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கங்கணா ரணௌத் நடிப்பில் வெளிவரவிருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படமான தலைவி (Thalaivi) ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இருவரும் தங்கள் மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசி, துணிச்சலுடன் தங்கள் வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்தவர்கள் என்பதால், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு கங்கணாவின் தேர்வும் பல பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன. 


ALSO READ: விரைவில் வெளியாகிறது தளபதி விஜய்யின் மாஸ்டர் டீஸர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR