வேணு அரவிந்த் இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் கைலாசம் பாலச்சந்தரின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார். இவர் சபாஸ் சரியான போட்டி என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் வேணு அரவிந்த் (Venu Arvind) இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர். ராதிகா (Radhika Sarathkumar) தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அலைபாயுதே, வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


ALSO READ | Actor Karthik: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி


இந்நிலையில் தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 



 


கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகிறார்கள்.


ALSO READ | #MeToo விவகாரம்: பேஸ்புக் நேரலையில் மனம் திறந்த பாடகி சின்மயி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப் பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR