டிவி, கேபிள் டிவிகளுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை
தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதைக்குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டும் இணைந்து கூறியிருப்பதாவது:-
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, தனியார் கேபிள் உரிமையாளர்களுக்கோ எந்த உரிமையும், உரிமமும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் கொடுக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கிறோம்.
மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா சம்பந்தப்பட்ட பாடல்கள், டீஸர்கள், டிரெய்லர்கள், திரைப்படங்கள், படக்காட்சிகள் போன்றவற்றை யாரேனும் ஒளிபரப்பு செய்தாலோ, ஒளிப்பரப்ப செய்ய உதவியாக இருந்தாலோ அவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதற்கான தண்டனை கிடைக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் இணைந்து உறுதியாக துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.