சமீபத்தில் வெளியான வலைத் தொடரான ​​(web series) தாண்டவ் (Tandav) தொடரில் இந்து மதம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்ததை அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா (India) அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினர். தாண்டவ் என்பது கவுரவ் சோலங்கி எழுதிய ஒரு அரசியல் டிராமா கதை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் , கதாசிரியர் கவுரவ் சோலாங்கி, தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தாண்டவ் வலைத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் மும்பையில் உள்ள அமேசான் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர்.


முன்னதாக, மகாராஷ்டிராவை (Maharashtra) சேர்ந்த பாஜக எம்.பியான மனோஜ் கோட்டக், வலைத் தொடரை தயாரித்தவர்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும் எனக்  கூறினார். இந்து தெய்வங்களை ‘மோசமான வகையில்’ சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். வலைத் தொடருக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை வடகிழக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு (Prakash Javadekar) கடிதம் எழுதியிருந்தார்.


பாஜக தலைவர் ராம் கதம், இந்து தெய்வமான சிவன் கேலி செய்யும் வகையில் வலைத் தொடரில் வசனங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேற்கு காட்கோபர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக FIR பதிவு செய்தார்.


இந்நிலையில், அமேசான் (Amazon) பிரைம் வீடியோவின் தாண்டவ் வலைத் தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் திங்கள்கிழமை மாலை ஒரு ‘நிபந்தனையற்ற’ மன்னிப்பை வெளியிட்டுள்ளனர். அவர்கள் தனது அறிக்கையில், மத நம்பிக்கைகள் அல்லது உணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ‘தந்தவ் ஒரு புனைக்கதை படைப்பு’ என்றும், ‘இதில் குறிப்பிட்டுள்ள மற்றும் நபர்கள் மற்றும் சம்பவங்கள் ஏதேனும் ஒத்து இருந்தால், அது முற்றிலும் தற்செயலானது’ என்றும் கூறியுள்ளனர்.


ALSO READ | ’Tandav’ என்ற வலைத் தொடர் சர்ச்சை; I&B அமைச்சகம் சம்மன் அனுப்பியது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR