ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை ஆட்டம் போட வைத்த தாப்சி பன்னு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர். அவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை காட்டியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் (Tamil Cinema) தனது முதல் படமான ஆடுகளத்தில் தாப்சி பன்னு தனுஷுடன் இணைந்து நடித்தார். பின்னர் அவர் பல மொழிகளில் பல படங்களில் நடித்து இந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.


ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் தாப்சி, தனது வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். "அவுட்சைடர் ஃபிலிம்ஸ்" என்ற தனது சொந்த பேனர் மூலம் அவர் தயாரிப்பாளராகியுள்ளார்.


ALSO READ:துள்ளி குதித்து குழந்தை போல் பலூன் விளையாடும் சமந்தா; வீடியோ வைரல்


இது குறித்த ஒரு குறிப்பு மற்றும் வீடியோ மூலம் அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார். "கடந்த ஆண்டு இந்திய திரைப்படத் துறையின் கனவில் நான் மூழ்கி கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆனபோது, நான் மிதப்பது மட்டுமல்லாமல் இதில் நீந்தவும் கற்றுக்கொள்வேன் என் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிரபலமாவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதவள் நான். என் மீது இந்த அளவிலான அன்மையும் அக்கறையையும் காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி” என்று தாப்சி எழுதியுள்ளார்.



"இது திருப்பிச் செலுத்துவதற்கான நேரம். ஏனென்றால் அதிக சக்தி கிடைக்கும்போது, பொறுப்பும் அதிகமாகிறது. நான் மேற்கொள்ளவிருக்கும் பணிகளில் வெற்றி பெற எனக்கு வாழ்த்து தெரிவிக்கவும். ஒரு தயாரிப்பாளராக வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கவுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.


தாப்சி பன்னு விக்ராந்த் மாஸ்ஸிக்கு ஜோடியாக சமீபத்தில் மர்ம படமான 'ஹசீன் தில்ருபா' நெட்ஃபிக்ஸ் பாத்தில் காணப்பட்டார். அவர் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் (Vijay Sethupathi) 'அனபெல் சுப்பிரமணியம்' என்ற தமிழ் படத்தில் காணப்படுவார்.


ALSO READ: பண மாலை அணிந்து மகளுடன் போஸ் கொடுக்கும் வனிதா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR