’நாங்க மிஸ் பண்றோம்’ கண்ணீர்விட்டு அழுத ’83’ படக்குழு
83 திரைப்படத்தின் ப்ரிவியூஷோவில் உலக்கோப்பை அணியில் இருந்த யாஷ்பால் ஷர்மாவை நினைத்து, முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க உணர்ச்சிவயப்பட்டனர்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. வரலாற்று சாதனையை நிகழ்வான அந்த தருணம், இப்போது இயக்குநர் கபீர்கான் இயக்கத்தில் ‘83’ திரைப்படமாக உருவாகியுள்ளது. தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார்.
ALSO READ | Movie Review: அந்த நாள் ஞாபகம்! கபில்தேவின் சாதனை! 83 திரைப்பட விமர்சனம்...
இப்படத்தின் ப்ரிவியூ ஷோ மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பி.வி.ஆர் சினிமாஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 83 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த சுனில் கவாஸ்கர், கீர்த்தி ஆசாத், திலீப் வெங்சர்கார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஷோ தொடங்குவதற்கு முன்பாக இரண்டு நிமிடங்கள், அப்போதைய அணியில் மிடில் ஆர்டராக விளையாடி அண்மையில் மறைந்த யாஷ்பால் ஷர்மாவுக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் குறித்து பேசிய 83 பிரபலங்கள் தங்களுடைய நண்பனுக்காக கண்ணீர்விட்டனர்.
சுனில் கவாஸ்கர் பேசும்போது, யாஷ்பால் ஷர்மா மறைவு தன்னை வெகுவாக பாதித்திருப்பதாக கூறினார். உலகக்கோப்பை தொடரின்போது யாஷ்பால் ஷர்மாவின் துடிப்பான ஆட்டம், கலகலப்பான அணுகுமுறை, இப்போதும் நீங்கா நினைவாக இருப்பதாக தெரிவித்த அவர், 83 படத்தின் திரையிடலின்போது யாஷ்பால் இல்லாமல் இருப்பது மனதுக்குள் வருத்தமாக இருப்பதாக கூறினார். பல்வீந்தர் சாந்து பேச்சைத் தொடங்குவதற்கு முன்பே கண்ணீர்விடத் தொங்கினார். நா தழுதழுத்த குரலில் பேசிய அவர், நிறைய இடங்களில் யாஷ்பாலை மிஸ் செய்கிறோம் எனக் கூறினார். அவரின் மறைவு கொடுத்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவது என்பது கடினமான விஷயம் என்றும் பல்வீந்தர் தெரிவித்தார்.
ALSO READ | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை!
கீர்த்தி ஆசாத் பேசும்போது, யாஷ்பால் இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்த பங்களிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடிய விதமே, தொடர் முழுவதும் வெற்றிகரமாக பயணக்க வீரர்களுக்கு உந்துசக்தியாக இருந்தது எனக் குறிப்பிட்டார். 83 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி யாஷ்பால் 240 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 120 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR