விஜய் நடிப்பில் வாரிசும், அஜித் நடிப்பில் துணிவு படம் ஒன்றாக பொங்கல் விருந்தாக ரிலீஸாகியுள்ளது. இரண்டு படங்களுக்கும் ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே போஸ்டரில் தொடங்கிய யுத்தம் ரிலீஸ் தேதி வரை தொடர்ந்தது. டீசர் மற்றும் டிரெய்லர் என இரண்டு படங்களையும் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், இப்போது வெளியாகியிருக்கும் இரண்டு படங்களையும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து தங்களின் எதிர்பார்ப்பை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றன. ஒட்டு மொத்த வசூலை வைத்து பார்க்கும்போது இப்போதைக்கு துணிவு படம் முதல் இடத்திலும் வாரிசு இரண்டாம் இடத்திலுமே இருக்கிறது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்க, தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது.


மேலும் படிக்க | ஒரே நாளில் களமிறங்கிய அஜித் விஜய் படங்கள்: 96 முதல் இன்று வரை...


துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. இதனால், வாரிசை ஒப்பிடும்போது துணிவு படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. எது எப்படியோ இரண்டு படங்களும் இப்போது பொங்கல் விடுமுறையில் அடுத்தகட்ட வசூலில் கல்லா கட்ட தயாராக இருக்கின்றன. இந்த நேரத்தில் அடுத்த வெடியை ரசிகர்கள் கொளுத்தி போட்டுள்ளனர். 



வாரிசு படத்தை முடித்த கையோடு விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். துணிவு படத்தை முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல 62 படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் உருவாக இருப்பதால், தீபாவளி ரிலீஸாக இந்த ஆண்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், வாரிசு மற்றும் துணிவுக்கு இணையத்தில் ஃபையர் விட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் தல 62 vs தளபதி 67 படம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. 


மேலும் படிக்க | வாரிசா? துணிவா? பொங்கல் வெற்றியாளர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ