சென்னை: தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் தனது 168 வது படத்திற்காக விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்துள்ளார். இப்படம் கிராமப்புற பொழுதுபோக்கு அம்சமாக எடுக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் "சர்க்கார்" படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தலைவர் 168 படம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிப்பதற்கு நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதுக்குறித்து தகவலை நேற்று (நவம்பர் 10) தலைவர் 168 படக்குழு அறிவித்தது.


இந்த படத்தில் குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் நடிப்பதை குறித்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிஉறுதி படுத்தி உள்ளது. மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியில், குஷ்பு, "28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி சார் உடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த காலங்களில் நாங்கள் பல படங்களில் நடித்துள்ளோம். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த எங்கள் ஜோடியை பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. நான் சுமார் 8 அல்லது 9 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். நடித்தால் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன். நடித்தால் ஒரு நல்ல படம் அல்லது பெரிய படம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அந்த சூழ்நிலையில் தான், இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் என்னை அணுகினார்கள். எனது கதாபாத்திரம் குறித்து கூறினார்கள். எனக்கு இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது. மிக அரிதாகவே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அதை நானும் விரும்புகிறேன்." எனக் கூறியுள்ளார்.


 



அதேபோல நடிகை மீனாவும் ஒரு வீடியோ செய்தியில், "சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவாவின் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறுத்தை சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இது எனது முதல் படமாகும். அதேவேலையில் ரஜினி சார் உடன் பல வருடங்களுக்கு பிறகு நடிக்க உள்ளேன். இந்த படத்தில் ஒரு நல்ல கதையும் சிறந்த கதாபாத்திரமும் உள்ளது. படத்தில் நான் வரும் காட்சிகள் மக்களுக்கு சரியான பொழுது போக்காக இருக்கும். மேலும் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்." எனக் கூறியுள்ளார்.


 



மீனா ரஜினிகாந்துடன் "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவர் வளர்ந்து 90-களில் ஒரு சில படங்களில் ரஜினியின் கதாநாயகியாக நடித்தார். இப்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் நடிக்க உள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.


 



மீனா மற்றும் குஷ்பு தவிர, சூரி, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தில் ரஜினியின் மகளாக கீர்த்தி நடிப்பார், குஷ்பு தனது ஜோடியாக நடிப்பார் என்று வதந்தி பரவியுள்ளது. படப்பிடிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை இன்னும் வரவில்லை. ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.