தலைவர் 168 படத்தின் அப்டேட் இன்று 6 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 


தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ஆகவே தலைவர் 168 என்றே குறிப்பிட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.


இந்த படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் வேலராமமூர்த்தி தலைவர் 168 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் அப்டேட் இன்று 6 மணிக்கு வெளியாகும் என அந்த படத்தின் தயரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.