ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று வெளியான தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வாசம் ஒன்றை நீக்க தயார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167 வது திரைப்படமான "தர்பார்" (Darbar) திரைப்படம் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை லைகா புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் பாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ரஜினிகாந்தின் தர்பார் படம் ஒரு மசாலா பொழுதுபோக்கு படமாக உள்ளது என பார்வையாளர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே படத்தின் அதன் விளம்பரங்களும் டிரெய்லரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடுத்துள்ளர். 


இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம் என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. 


சர்ச்சைக்குரிய வசனத்தை தர்பார் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார். அந்தகையில் இந்த சர்ச்சை தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்க எழுதப்பட்டது அல்ல. இருப்பினும், அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்தால், படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


 



 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.