`தளபதி 66` அரசியல் சார்ந்த படமா? இயக்குனர் வம்சி விளக்கம்!
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கக்போகும் `தளபதி 66` படம் குறித்து இயக்குனர் சில தகவல்களை கூறியுள்ளார்.
சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரை நடிப்பு தொடங்கி நடன அசைவுகள், ஸ்டைல் என அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர். நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணியை நிறைவு செய்திருக்கிறார். இப்படத்திலிருந்து வெளியான அரபிகுத்து பச்சிளம் குழந்தை முதல் பாலைவனம் வரை அனைவரையும் நடனமாட வைத்தது. ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும் படிக்க | புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் நேரில் அஞ்சலி!
இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே 'தளபதி 66' குறித்த செய்திகள் வெளியானது. தோழா, மகரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி நடிகர் விஜயை வைத்து படம் உருவாக்க இருக்கும் செய்தியினை அறிவித்தார். தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்ற இருப்பதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தது, அதனை பிரபுதேவாவும் மறுத்ததோடு இது வெறும் வதந்தி என்று கூறியிருந்தார்.
இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் நடிகர் விஜய் இடம்பிடிக்க போகிறார் என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சில செய்திகள் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'தளபதி 66' அரசியல் கதையம்சம் கொண்ட படம் என சில வதந்திகள் பரவிய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குனர் வம்சி படம் குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமல்ல, இது தோழா, மகரிஷி போன்ற படங்களை போலவே முற்றிலும் உணர்வுபூர்வமான படமாக உருவாகவுள்ளது என்று கூறியுள்ளார். இயக்குனர் வம்சி நடிகர் விஜயின் நடிப்பு திறமையால் ஈர்க்கப்பட்டு, அவருக்காகவே இந்த 'தளபதி 66' படத்தின் கதை வடிவமைத்து இருக்கிறார். மேலும் இப்படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் முதல்முறையாக தமன், நடிகர் விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
மேலும் படிக்க | நெய்வேலி செல்பி வெளிவந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு! என்ன நடந்தது அன்று?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR