பீஸ்ட் படத்தை நிறைவு செய்த தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும்  இயக்குநர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2


பூஜை போட்ட கையோடு படக்குழு விறுவிறுப்பாக சூட்டிங்கில் இறங்கியது. சென்னையில் ஒரு சில காட்சிகளை படமாக்கிய தளபதி 66 குழுவினர், பாடல் ஒன்றின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார்களாம். அடுத்ததாக ஹைதராபாத்தில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. நீண்ட ஷெட்யூலில் நடைபெறும் இந்தப் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அந்த வேலைகளை முடிந்தவுடன் ஹைதராபாத் பறக்கும் படக்குழு, தொடர்ச்சியாக சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர்.



சர்பிரைஸாக இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் விஜய்யுடன் நடிக்கிறார். படத்தின் பூஜையில் கலந்து கொள்ளும் வரை அவர் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவர் திடீரென பூஜையில் கலந்துகொண்டதால், சரத்குமாரும் நடிக்கிறாரோ? என்ற பேச்சு அடிப்பட்டது. உடனே, படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேநேரத்தில் அவருடைய கதாப்பாத்திரம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.



அப்பாவாக நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு சரத்குமார் வில்லன் அவதாரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR