Thalapathy 67 Update: 2023 பொங்கல் ஸ்பெஷல் படங்களாக அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து உருவான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல துணிவு படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இந்தாண்டு தீபாவளிக்கும் விஜய் - அஜித் படங்கள் மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  தனது 62ஆவது படத்திலும், விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் தனது 67ஆவது படத்திலும் நடிக்க உள்ளனர். 


தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மனோபாலோ இதனை ட்விட்டரில் அறிவித்து பின்னர் அதை டெலீட் செய்தது நினைவுக்கூரத்தக்கது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் 6-ல் எதிர்பாராத திருப்பம்! டைட்டில் வின்னர் இவரா?


'தளபதி 67' படம் ஒரு பான்-இந்திய திரைப்படமாக மிகப்பெரிய தயாரிப்பில் உருவாகவிருக்கிறது.  வெகு நாட்களாகவே 'தளபதி 67' படம் குறித்த பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகிக்கொண்டே வருகின்றது.


இதுதவிர இந்த படத்தில்  திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் சார்ஜா, மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும், பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் கூறப்படுகின்றன.  இது ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாகவும்,  ஹாலிவுட்டில் பிரபலமான 'ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்' என்கிற படத்தால் ஈர்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜ், அந்த படத்தின் உரிமையை வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தை தனது பாணிக்கேற்ப இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்திய பேட்டி ஒன்றில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அப்டேட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


அதாவது, லோகேஷின் முந்தைய படமான விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போன்று, தளபதி 67 படத்தின் பெயர், நடிகர்கள் அறிவிப்பு குறித்த அப்டேட்களுடன் மோஷன் பிக்சர் படக்குழு தரப்பில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோஷன் பிக்சர் வரும் ஜன. 26 ஆம் தேதி அன்று வெளியாகலாம் என்றும், அது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க |  சென்னை திரும்பினார் நடிகர் விஜய் ஆண்டனி; வீடியோ காலில் பேசுவார் - இயக்குநர் சுசீந்திரன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ