Thalapathy 67 Official Title: வெளியானது அதிகாரப்பூர்வ பெயர்... Bloody Sweet!
Thalapathy 67 Official Title: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ள படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியானது.
Thalapathy 67 Official Title: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் - லோகேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எரிமலை உயரத்திற்கு உள்ளது.
இப்படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், வாரிசு படத்தின் வெளியீட்டில் இருந்து மூன்று வாரங்கள் கழித்து அதன் படப்பூஜையின் வீடியோவை படக்குழு நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. முன்னதாக, இந்த வாரம் முழுவதுமே அப்டேட் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில், பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த், கோலிவுட் நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான், நடனக்கலைஞர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
மேலும் படிக்க | Thalapathy 67 - Code Red: சொன்னதை செய்த லோகேஷ்... 100% தளபதி படம்
முன்னதாக, பிப். 1, 2, 3 ஆகிய தேதிகளை நோட் பண்ணுங்க என கோயம்புத்தூரில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதேபோன்று, பிப். 1ஆம் தேதி திரிஷா படத்தில் நடிப்பதையும், படப்பூஜையையும் படக்குழு வெளியிட்டிருந்து. தொடர்ந்து, பிப். 2ஆம் தேதி (நேற்று) படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமை குறித்த அப்டேட் விடப்பட்டது. மாலையில், படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் பிப். 3ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு விடப்படும் என்ற அறிவிப்பு அடங்கிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
மேலும், எதிர்பார்க்காத வகையில், படக்குழு விமானத்தில் காஷ்மீர் சென்றதையும் வீடியோவாக இன்று மதியம் வெளியிட்டிருந்தனர். விக்ரம் படத்தில் நடித்திருந்த 'ஏஜென்ட் டீனா' வசந்தி இந்த வீடியோவில் இருந்த நிலையில், அவரும் இந்த படத்தில் நடிக்கிறாரா அல்லது நடனக்கலைஞராக சென்றிருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.
படத்தின் பெயராக சமூக வலைதளங்களில் பல அனுமானங்கள் ரசிகர்களால் வைக்கப்பட்டாலும், குருதிப்புனல், ஈகிள் போன்ற பெயர்கள்தான் இருக்கும் என கூறப்பட்டன. இந்நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ பெயர், Sony Music India வீடியோவாக அறிவிக்கப்பட்டது. தளபதி 67 படத்திற்கு அதிகாரப்பூர்வமாக, "Leo" என பெயரிடப்பட்டது.
மேலும் படிக்க | தளபதி 67-ல் சர்பிரைஸ் என்டிரி கொடுத்த சிவகார்த்திகேயன் ஹீரோயின்...! மாஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ