Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்... நாளை வெளியீடு

Thalapathy 67 Title Reveal Update: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பல்வேறு உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ள படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் குறித்தும், அதன் அறிவிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 2, 2023, 06:17 PM IST
  • படத்தின் நடிகர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
  • படத்தின் டிவி, சாட்டிலைட் உரிமை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டது.
  • படத்தின் பூஜை வீடியோவும் வெளியிடப்பட்டது.
Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்... நாளை வெளியீடு

Thalapathy 67 Title Reveal Update: தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் - லோகேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கடந்த மாதமே இப்படத்திற்கு பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், வாரிசு வெளியீட்டு பின் மூன்று வாரங்கள் கழித்து அதன் படப்பூஜையின் வீடியோவை படக்குழு நேற்றுதான் வெளியிட்டது. முன்னதாக, இந்த வாரம் முழுவதுமே அப்டேட் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த படத்தில், சஞ்சய் தத், ஜாக்கி ஷெராஃப், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். 

மேலும் படிக்க | தளபதி 67-ல் சர்பிரைஸ் என்டிரி கொடுத்த சிவகார்த்திகேயன் ஹீரோயின்...! மாஸ் அப்டேட்

தரையில் நடந்ததெல்லாம், திரையில் வருவது போல படக்குழுவின் ஒவ்வொரு அசைவும் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வந்தது. படக்குழு அறிவிப்புக்கு முன்னரே ரசிகர்கள் இந்த அனைத்தையும் கணித்துவிட்டதால் 'புதுசா அப்டேட் விடுங்க பாஸ்' என கோரிக்கை விடுகின்றனர். அதற்கெல்லாம், சளைக்காமல் அப்டேட்டை அள்ளிவீசி வருகிறது படக்குழு. 

முன்னதாக, பிப். 1, 2, 3 ஆகிய தேதிகளை நோட் பண்ணுங்க என லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூரில் கூறியிருந்தார். அதேபோன்று, நேற்று திரிஷா படத்தில் நடிப்பதையும், படப்பூஜையையும் படக்குழு வெளியிட்டிருந்து. அதனால், இன்றைய அப்டேட் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதில், ஓடிடி, சாட்டிலைட் உரிமை குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. ஓடிடி - நெட்பிளிக்ஸ்; சாட்டிலைட் உரிமை - சன் டிவி. 

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'விக்ரம்' ஸ்டைல் ப்ரோமோ நாளை படத்தின் பெயருடன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் Lokesh Cinematic Universe உடன் சேர்ந்ததா அல்லது மாஸ்டர், மாநகரம் போன்று Stand Alone படமா என்பது நாளை உறுதியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், 'நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த அப்டேட்' என தளபதி 67 படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் நாளை மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | தளபதி 67-ல் இவ்வளவு குறியீடுகளா? Rolex LCU-வில் விஜய்-க்கு தம்பியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News