ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ சமீபத்தில் கொடுத்த நேர்காணலில், தளபதி விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரு படத்தில் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.  இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது.  விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கியுள்ள அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் முன்னணியில் உள்ளது. ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக ஜவான் படம் வசூல் சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் சினிமா கரியரில் ஒரே ஆண்டில் 2 படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது. ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு மாஸ் மசாலா கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் ஆக படம் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாண் to சிவகார்த்திகேயன்-திரை பிரபலங்களின் தீபாவளி க்ளிக்ஸ்!


ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜய் சேமியா ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இருப்பிடம் இது வதந்தியாகவே இருந்தது. தற்போது சமீபத்தில் நேர்காணலில் பேசிய இயக்குனர் அட்லீ, உண்மையில் விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார்.  ஜவான் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து அட்லீ படம் இயக்க உள்ளார் என்று கூறப்பட்டது, இருப்பிடம் அவருக்கு பாலிவுட்டில் இருந்து நிறைய ஆபர்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.  ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த மாதம் டங்கி படமும் வெளியாக உள்ளது. அதன் பிறகு, சுஜோய் கோஷ் படத்தில் ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் இணைந்து நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  


தளபதி விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்த லியோ படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படம் வெளியாகி 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த படம் எல்சியூவின் ஒரு பகுதியாக இருந்தது, பல பிரச்சனைகளை தாண்டி லியோ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா மற்றும் பல நடிகர்கள் உள்ளனர்.



தளபதி 68 பற்றிய அப்டேட்கள் படக்குழுவிடம் இருந்து உடனுக்குடன் வந்து கொண்டு இருக்கின்றன.  அமெரிக்காவில் தொடங்கி, தாய்லாந்து வரை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா சமூக வலைத்தளங்கள் மூலம் அப்டேட்களை வழங்கி வருகிறார். இன்று காலை விஜய் தாய்லாந்தில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.  விஜய் ஏர்போர்ட்டில் நடந்து வரும் காட்சிகள் தற்போது வைரல் ஆகி உள்ளது.



மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ