Thalapathy 69:விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது கார்த்திக் சுப்பராஜா? வெற்றி மாறனா? பதில் இதோ!
Thalapathy 69 Director: நடிகர் விஜய், அவரது கடைசி படத்தில் நடிக்க உள்ளதை தொடர்ந்து, அந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
Thalapathy 69 Director Vetrimaaran Or Karthik Subbaraj: தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக விளங்கும் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் அரசியல் ஆர்வம்..
கோலிவுட்டின் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், நடிகர் விஜய். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வரும் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த விஜய், பின்னர் மாஸ் ஹீராே கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
11 வருடங்களுக்கு முன்பு விஜய்யின் ‘தலைவா’ படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த வசனங்கள், காட்சிகள் ஆகியவை அப்போது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த படம் வெளியான போதே விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதாக பேசப்பட்டது. இதையடுத்து தான் நடிக்கும் படங்களில் அரசியல் பஞ்ச் வசனங்கள் பேசுவதும் பட விழாக்களிலும் குட்டி ஸ்டோரி கூறி ரசிகர்களை ஈர்ப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தார். 2018ஆம் ஆண்டு விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் மூலம் ரசிகர்கள் விஜய்யின் அரசியல் ஆர்வத்தினை தெரிந்து கொண்டனர். இவர் விரைவில் அரசியலுக்கு வருவாரா, அல்லது ரஜினி போல கடைசி வரை அரசியலுக்கு வராமலேயே சென்று விடுவாரா என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுந்தது.
திரையுலகை விட்டு விலகும் விஜய்..
நடிகர் விஜய், கடந்த 2ஆம் தேதி, தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது குறித்து இவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தான் தற்போது கமிட் ஆகியிருக்கும் படத்தை முடித்த பிறகு திரையுலகை விட்டு விலகுவதாகவும், அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தளபதி 69:
நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான GOAT-Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, அஜ்மல், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
GOAT படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை RRR படத்தை தயாரித்த டிவிவி எண்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
மேலும் படிக்க | Actor Vishal: அரசியல் கட்சி தொடர்பாக விஷால் வெளிட்ட முக்கிய அறிக்கை!
இயக்குநர் யார்?
‘தளபதி 69’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது இப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. வெற்றிமாறன், ஏற்கனவே கையில் விடுதலை 2, வடசென்னை 2, வாடிவாசல் என சில படங்களை வைத்துள்ளார். இதில் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், ஏற்கனவே இருக்கும் படங்களை விடுத்து தற்போது விஜய்யை வைத்து புதிய படத்தை வெற்றி இயக்குவாரா என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, வெற்றிமாறனும் விஜய்யும் கைக்கோர்ப்பது பல லட்சம் ரசிகர்களின் கனவாக உள்ளது. இந்த கனவை நிறைவேற்ற இருவரும் கைக்காேர்ப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தனுஷ்-அனிருத் நட்பில் விரிசல்!? காரணம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ