நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு காஷ்மீர் மற்றும் சமீபத்தில் சென்னையில் என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில் லியோ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தளக்கோனா அருவிப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.  கல்வி விருது வழங்கிய அடுத்த நாளே படப்பிடிப்பிற்கு சென்ற விஜய் எப்படியாவது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இடைவிடாது நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மாநிலம் தளக்கோனா அருவி அருகே நடந்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்யை ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் சூழ்ந்து உற்சாகங்களை எழுப்பியுள்ளனர்.  இந்நிலையில் தன்னை சூழ்ந்து பார்க்க வந்த  ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கை அசைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் புதிய சாதனை..! 23 மணிநேரத்திற்குள் படமாக்கப்பட்ட ‘கலைஞர் நகர்’ திரைப்படம்..!


மேலும் இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் வனத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும், செம்மரங்களை கடத்தி வரும் கும்பலை மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  சமீபத்தில் லியோ படத்தில் இருந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முதல் சிங்கிள் நான் ரெடி பாடல் வெளியானது.   'தம்பிங்களுக்குகோசம் (தம்பிகளுக்காக) வாண்ணா...' என ஆரம்பிக்க, 'நான் ரெடிதான் வரவா... அண்ணன் நான் தனியா வரவா' என விஜய் பாடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், ஒரு இடத்தில் 'போஸ்டர் அடி... அண்ணன் ரெடி... கொண்டாடும் கொளுத்தனும்டி...' என அவரின் அரசியல் பிரவேச வாசனை பலமாகவே அடிகிறது. இதுபோன்ற வரிகள் புதிதில்லை என்றாலும், இந்த சூழலில் இது வேறு விதத்தில் அணுகப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.  இந்த பாடல், தளபதி ரசிகர்கள் மட்டுமன்ற் பலரையும் ஈர்த்துள்ளது. 



அனிருத் இசையில் உருவான ”நான் ரெடிதான் வரவா..” பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்துள்ளது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தது.  இந்நிலையில்தான் இந்த பாடல் குறித்தும் விஜய் குறித்தும் ஒரு நபர் சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். லியோ படத்தில் விஜய், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். போதாக்குறைக்கு நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு இப்படம் மூலம் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் ஒவ்வொருவரின் கதாப்பாத்திரம், கதை, காட்சிகள் என எதையும் லீக் ஆகாமல் படக்குழு பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரால் படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி போதை மருந்துக்கு எதிரான குற்றாச்சாட்டுக்கு ஆதரவு பெருகினால் அந்த புகைப்படம் மற்றும் போதை சம்பந்தமான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும் நிலை வரலாம். இது குறித்து லியோ படக்குழுவினரிடம் இருந்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | நடிகர் விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..! சிக்கலில் லியோ திரைப்படம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ