தமிழ் சினிமாவில் புதிய சாதனை..! 23 மணிநேரத்திற்குள் படமாக்கப்பட்ட ‘கலைஞர் நகர்’ திரைப்படம்..!

Kalaingar Nagar Movie: கலைஞர் நகர் என்ற படத்தின் படப்பிடிப்பு 23 மணிநேரத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை அப்படத்தின் படக்குழுவே கூறியுள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2023, 11:08 AM IST
  • சுயம்வரம் படத்தின் ரெக்கார்டை உடைத்துள்ளது கலைஞர் நகர் திரைப்படம்.
  • 23 மணி நேரத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.
  • இது எப்படி சாத்தியம்? அந்த படக்குழுவே இது குறித்து பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் புதிய சாதனை..! 23 மணிநேரத்திற்குள் படமாக்கப்பட்ட ‘கலைஞர் நகர்’ திரைப்படம்..! title=

தமிழ்சினிமாவில் 1999ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘சுயம்வரம்’ படம் 24 மணிநேரத்திற்குள் ஷூட்டிங்க் முடித்த படம் என்ற கின்னஸ் சாதனை புரிந்தது. இந்த சாதனையை இன்னொரு தமிழ்படம் முரியடித்துள்ளது. ‘கலைஞர் நகர்’ என்ற இந்த திரைப்படம், 22.53 மணிநேரத்திற்குள்ளாக படப்பிடிப்பை முடித்து புதிய சாதனையை புரிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் சாதனை..

கார்த்திக், பிரபு, ஐஸ்வர்யா, பாக்யராஜ், ஊர்வசி, நெப்போலியன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் சுயம்வரம். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பு 24 மணிநேரத்திற்குள் முடிக்கப்பட்டு. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றது. பல இயக்குநர்கள், ஒளிபதிவாளர்கள் மற்றும் டெக்னீஷியன்களின் முயற்சியினால் சுயம்வரம் படக்குழுவினர் இந்த சாதனையை புரிந்தனர். இந்த சாதனையை ‘கலைஞர் நகர்’ என்ற புதிய படம் முறியடித்துள்ளது. 

மேலும் படிக்க | “அப்பாவிற்கு குடிப்பழக்கம் இருந்தது..” ரோபோ சங்கரின் மகள் பரபரப்பு பேட்டி..!

கலைஞர் நகர்..

‘’பிதா’’ என்ற திரைப்படத்தை 23.23 மணி நேரம் இயக்கிய இயக்குனர் சுகன் குமார் அடுத்த படைப்பான ‘’கலைஞர் நகர்’’ என்ற திரைப்படத்தை 23 மணி நேரம் அடைவதற்கு 7 நிமிடத்திற்கு முன்பாகவே, அதாவது 22.53 மணி நேரத்திற்குள் முடித்து சாதனை படைத்துள்ளார். இது தமிழ்சினிமாவிற்கு புதிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. கலைஞர் நகர் படக்குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை, வடபழனியில் நடைப்பெற்றது. இதில், படக்குழுவினர்கள் சுகன் குமார், ப்ரஜின், ப்ரியங்கா, லிவிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

மேடை நடனக் கலைஞர்கள் குறித்த படம்..

படத்தின் இயக்குநர் சுகன் குமார் நிகழ்ச்சியில் பேசியபோது,  பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் பிரம்மாண்டமாக படம் எடுப்பதாகவும். இந்த சிறிய படத்தை பிரம்மாண்டமாக எடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும்,. இந்த படத்தை 23 மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 நிமிடங்களுக்கு முன் முடித்து விட்டோம். இது மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த படத்தை எடுத்ததற்கு தான் மட்டும் முக்கிய காரணம் கிடையாது என்றும் இதில் என்னுடைய கடைசி உதவியாளர் வரைக்கும் உழைத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

3 பாடல்கள் 2 சண்டைகாட்சிகள்..

23 மணிநேரத்திற்களு எடுக்கப்பட்டுள்ள படம் என்றாலும் இதில் 3 பாடல்கள், 2 சண்டை, காமெடி என எல்லா காட்சிகளும் படமாக்கப்பட்டதாக சுகன் குமார் தான் பேசுகையில் தெரிவித்தார். மேலும்,  இது முழுக்க முழுக்க மேடை நடனக் கலைஞர்களை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை தெளிவாக காண்பித்துள்ளதாக கூறினார்.  படத்தின் நாயகி ப்ரியங்கா மேடையில் பேசுகையில், ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மிக குறைவான படங்களில் நடித்து வருவதாக கூறினார். மேலும் 23 மணிநேரத்திற்குள் மிக மிக அவசரம் இப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

5 கேமராக்கள்..

கலைஞர் நகர் படத்திற்காக 5 கேமராக்களை படக்குழு பயன்படுத்தியுள்ளது.  முதல் நாள் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பு அடுத்த நாள் மதியம் 1.23 மணிக்கு முடிக்கப்பட்டுள்ளது. பாடல்கள், சண்டை காட்சிகள் உள்பட எல்லாவற்றையும் ஒரே நாளுக்குள் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய விஷயம் என சில சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | நடிகர் விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..! சிக்கலில் லியோ திரைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News