தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்களித்துச் சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் சட்டசபை தேர்தலில் (TN Assembly Polls 2021) தனது வாக்குகளை பதிவு செய்ய நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அவர் சைக்கிளில் வந்தது ஏன் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. மேலும் அவர் வாக்கு பதிவு செய்ய சைக்கிளில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலும் ஆனது. 



ALSO READ | தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்த தளபதி நடிகர் விஜய்!


இந்நிலையில் விஜய் (Actor Vijay) சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்பது குறித்த அவரது தரப்பினர் விளக்கத்தை அளித்தனர். விஜய்யின் வீடு அருகில்தான் பூத் இருந்தது என்பதாலும் அந்த பூத் உள்ள தெருவில் கார் செல்ல முடியாது என்பதும் அவர் சைக்கிளில் சென்றதாக விஜய் தரப்பினர் விளக்கம் அளித்தனர். 


இதற்கிடையில் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக (BJP) சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு (Kushboo) இதுகுறித்து கூறுகையில் ’விஜய் நேரத்தை வீணாக்க கூடாது என்பதற்காகவே சைக்கிளில் சென்றிருப்பார், விஜய் சைக்கிளில் சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்று கூறி புதீய விளக்கத்தை அளித்துள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR