தமிழ் திரையுலகில், மறக்க முடியாத படங்களின் லிஸ்டில் முக்கிய இடத்தை பெற்றுள்ள படம், தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கியிருந்த இந்த படத்தில், அவரது தம்பி ஜெயம் ரவியே கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் குறித்து இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனி ஒருவன்: 


சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை பார்த்து கோபப்படும் காவல் அதிகாரி, மக்களுக்கு கேடு விளைவிப்போரை, அழிக்கும் நோக்கில் அது எதிரியை தேர்ந்தெடுக்கிறார். அந்த எதிரியை அவர் இறுதியில் வீழ்த்தினாரா இல்லையா? இதுதான் தனி உருவம் படத்தில் ஒரு வரி கதை. இதில் எந்த தமிழ் படத்திலும் இல்லாத அளவிற்கு ஹீரோவிற்கும் வில்லன் இருக்கும் சமமான பவரையும் காட்சிகளையும் கொடுத்து அசத்தியிருப்பார் மோகன் ராஜா. 


படம் ஆண்டுகளாக திரையுலகில் பிரவேசிக்காமல் இருந்த அரவிந்த்சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆக்சன் திரில்லர் படமாக இருப்பினும், திரைக்கதையில் இருந்த காதல்/காமெடி ஆகிய காட்சிகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் தியேட்டர் பக்கம் இழுத்தது. இதில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவியும் பொருந்தி போயிருப்பார். இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் மோகன் ராஜா, இந்த படத்தை எந்த ஹீரோவுக்காக எழுதினார் என்பதை தெரிவித்திருக்கிறார். 


இந்த ஹீரோதான்: 


தனி ஒருவன் படத்தை, தான் வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதியிருந்ததாக மோகன் ராஜா தனது நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார். இந்த படத்தின் கதையை ஜெயம் ரவிக்காக எழுதவில்லை எனவும், தெலுங்கு நடிகர் பிரபாஸை மனதில் வைத்து தான் இப்படத்தின் கதையை எழுதியதாகவும் அவர் கூறியிருக்கிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸ் தனி ஒருவன் வெளியான சமயத்தில், அனைத்து பிரபல இயக்குனர்களின் பேவரிட் ஹீரோ பட்டியலில் இருந்தார். அது மட்டும் இன்றி அவர் அந்த சமயத்தில் பாகுபலி படத்தின் முதல் பாகத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். எந்த காரணத்தினாலோ அவரால் தனி ஒருவன் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனால்தான் ஜெயம் ரவிக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. 


மேலும் படிக்க | ‘தனி ஒருவன் 2’ அப்டேட் ரெடி..! வில்லனாக நடிப்பது இவரா..? அப்போ ஹீரோ யாரு..?


தனி ஒருவன் 2: 


எட்டு ஆண்டுகள் கழித்து தனி ஒருவன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில், நடிகர் ஜெயம் ரவியின் மோகன் ராஜாவும் ஒன்றாக தோன்றினர். மேலும், இரண்டாம் பாகம் எப்படி இருக்க போகிறது என்பதற்கான கிளிம்ஸ் கதையையும் சுவாரசியமாக கூறினர். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹிப் ஆப் தமிழா ஆதி இந்த படத்தின் இசையமைப்பாளர் இல்லை. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு படத்தின் வேலைகள் தொடங்க இருந்தன. ஆனால் சில காரணங்களுக்காக இதன் வேலைகள் தள்ளிப்போனது. 



புது வில்லன்: 


தனி ஒருவன் படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி அந்த படத்தின் இறுதியில் உயிரிழந்ததை தொடர்ந்து, புது வில்லனை இரண்டாம் பாகத்திற்கு நியமித்துள்ளனர். அவர் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். 


மேலும் படிக்க | தனி ஒருவன் 2 அப்டேட்.. மிகப்பெரிய ட்விஸ்ட்டுடன் வீடியோ வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ