தவமாய் தவமிருந்து ஞாயிறு ஸ்பெஷல் எபிசோட் : மார்க்கை கொல்ல துணியும் தணிகா.. காத்திருக்கும் ட்விஸ்ட்
Thavamai Thavamirundhu Today`s Episode Update: தேர்தலில் களமிறங்கும் மார்க்.. கொல்ல துணியும் தணிகா, நடக்க போவது என்ன? தவமாய் தவமிருந்து ஞாயிறு ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தவமாய் தவமிருந்து’ சீரியல்.
தவமாய் தவமிருந்து : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து.
ஞாயிறு மதியம் 1 மணிக்கு ஸ்பெஷல் எபிசோட்
இந்த சீரியலில் தேர்தல் காட்சிகள் தொடங்க உள்ள நிலையில் வரும் ஞாயிறு மதியம் 1 மணிக்கு தவமாய் தவமிருந்து சீரியலின் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
முடிவை மாற்றும் சீதா
அதாவது, ஒரு பக்கம் ராஜா தேர்தலில் நிற்க மறுபக்கம் மார்க் தேர்தலில் நிற்கும் சூழ்நிலை உருவாக மார்க் தேர்தலில் இருந்து விலகி கொள்ள முடிவெடுக்க சீதா நீங்க கண்டிப்பா நிற்கணும் என முடிவை மாற்றுகிறாள்.
மோதலாக மாறும் வாக்குவாதம்
அதற்கு அடுத்து வீட்டுக்கு வரும் தணிகா ராஜாவுடன் சேர்ந்து மார்க் டீமை கலாய்த்து வெறுப்பேத்த முயற்சி செய்ய மார்க் மற்றும் சீதா ஆகியோர் கோவிலுக்கு செல்கின்றனர். ரவி, மலர், பாண்டி ஆகியோரிடம் வரும் வரை எந்த பிரச்னையும் வேண்டாம் என சொல்லி விட்டு செல்கின்றனர். அப்போது அங்கு சீதா முருகனை சந்த்தித்து பேசுகிறாள். அதற்குள் வீட்டில் இரண்டு தரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அந்த வாக்கு வாதம் மோதலாக மாறுகிறது.
அதற்குள் முருகன் நீங்க சீக்கிரமாக வீட்டுக்கு போங்க என சொல்லி மார்க் மற்றும் சீதாவை அனுப்பி வைக்க இங்கே சண்டையில் ராஜா ரவியை கத்தியால் குத்த வருகிறான். உடனே மார்க் இதனை தடுத்து நிறுத்தி ரவி, மலர் மற்றும் பாண்டியை போட்டு அடிக்கிறார்.
மார்க்கை கொல்ல திட்டம் போடும் தணிகா
பிறகு மார்க் சீதாவுடன் சென்று தேர்தலில் நிற்க போவதில்லை என சொல்ல அங்கு வரும் தணிகா இவர்களை ஏளனமாக பேச, சீதா மார்க் கண்டிப்பா தேர்தலில் நிற்பார் என சவால் விடுகிறாள். இதனால் கடுப்பாகும் தணிகா மார்க்கை கொன்று அந்த பழியை ராஜா மீது போட்டு அவனை உள்ளே தள்ள திட்டம் போடுகிறான்.
மூச்சுபேச்சில்லாமல் கிடக்கும் சாவித்திரி
அடுத்து அரசியல் கூட்டம் ஒன்று நடக்க அங்கு மார்க் பேச போகும் பொது அவர் மீது வெடிகுண்டுகளை தூக்கி போடுகின்றனர். இன்னொரு பக்கம் சாவித்திரி மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறாள்.
மேலும் படிக்க | சகோதர பாசம் என்றாலே பாசமலர்தான்..62 ஆண்டுகளை கடந்த அழகு காவியம்..!
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? பரபரப்பான காட்சிகளுடன் தவமாய் தவமிருந்து சீரியலின் ஸ்பெஷல் எபிசொட் ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த சீரியலில் மேலும் பல திருப்பங்களும் மாற்றங்களும் வரவுள்ள நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலின் ஸ்பெஷல் எபிசோடை ஞாயிறு மதியம் 1 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தவமாய் தவமிருந்து : சீரியலை எங்கு பார்ப்பது?
தவமாய் தவமிருந்து சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | இந்த 5 கொரியன் ஆக்சன் திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ