ரியோவில் நடந்து வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில்:-  பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுக்கள். இது நமக்கெல்லாம் பெருமையான ஒன்று. எதிர்கால வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களை தாண்ட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.