மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமர் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இதில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாக கொண்டு வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் வாசுதேவ் இயக்கிவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



சிம்புவின் 47ஆவது படமாக உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.


 



இந்நிலையில், ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடல் வரும் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ராம் சரண் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கம்


ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வரவிருக்கும் பாடல் என்பதால் இப்பாடலின் மீதும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.


மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR