சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி படம், தி கேரளா ஸ்டோரி. சுதீப்தோ சென் என்ற இயக்குநர் எடுத்திருந்த இந்த படத்திற்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் இப்படத்தை திரையிட மாட்டோம் எனக்கூறி பல தியேட்டர் நிறுவனங்கள் படத்தின் ஸ்கிரீனிங்கை நிறுத்திவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலை மிரட்டல்கள்:


சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த படம் 10 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இப்படம் இதுவரை சுமார் 23 கோடி வசூல் செய்துள்ளது.  தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்திருந்த நடிகர்களுக்கும் அந்த படத்தின் இயக்குநருக்கும் கடந்த சில நாட்களாக கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக இதில் ஃபாத்திமா என்ற கதாப்பாத்திரத்தில நடித்திருந்த ஆதா ஷர்மாவிற்கு பலர் இந்த படத்தில் நடித்ததற்காக கன்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆதா ஷர்மாவிற்கு விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 


மேலும் படிக்க | 25 Years of Aval Varuvala: ஹாலிவுட் படத்தின் காபியா அவள் வருவாளா? 25 ஆண்டுகளை கடந்த படம் குறித்த அறியாத தகவல்!


ஆதா ஷர்மாவிற்கு விபத்து!


ஆதா, நேற்று (மே 14) இந்து யக்தா யாத்திரைக்கு சென்றுள்ளார். அந்த பயணத்தின் போது ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இந்த செய்தி நேற்று முழுவதும் இணையத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து, நடிகையின் நிலைக்கு குறித்து பலர் அவருக்கு மெஸஜ் செய்வதும் ட்வீட் செய்வதுமாய் இருந்தனர். இதையடுத்து, ஆதா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.


ஆதா ஷர்மா ட்வீட்:


நடிகை ஆதா ஷர்மா தனது விபத்து செய்தி குறித்து அனைவரும் விசாரித்ததை அடுத்து அவர்களுக்கா ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விபத்து குறித்த செய்தி வெளியானதில் இருந்து எனக்கு ஏகப்பட்ட பேர் மெஸஜ் செய்த வண்ணம் உள்ளனர். நான் நலமாகத்தான் இருக்கிறேன். என்னுடன் சேர்த்து தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் அனைவரும் நலமாகத்தான் உள்ளோம். பெரிதாக எதுவும் நடக்கவில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். 



போராட்டகாரர்களின் சதி? 


தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பல அமைப்பினர் போர் கொடி தூக்கி வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்திலும் இதற்கான எதிர்ப்பு மிகவும் வலுவாக இருந்தது. இப்படி அனைத்து பக்கங்களில் இருந்த எழுந்த எதிர்ப்பே தி கேரளா ஸ்டோரி படக்குழுவிற்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக இருந்தது. இதையடுத்து, ஆதா ஷர்மாவின் இந்த விபத்தும் ஒரு வேலை போராட்டக்காரர்களின் சதியாக இருக்குமோ என சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். 


எதிர்ப்பும் ஆதரவும்:


என்னதான் இந்த படத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், சில பிரபலங்களும் அரசியலின் முக்கிய புள்ளிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். பிரதம் நரேந்திர மோடி, இப்படத்திற்கு முழு ஆதரவு தருவதாக கூறியிருந்தார். நடிகைகள் கங்கனா ரணாவத், குஷ்பு உள்ளிட்டோர் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் கேரளாவை சேர்ந்த சில நடிகர்கள் தி கேரளா ஸ்டோரி படம் உண்மையை வைத்து எடுக்கப்பட்டதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இப்படி எதிர்ப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் மத்தியில் திரையரங்குகளில் நடமாடி வருகிறது கேரளா ஸ்டோரி


மேலும் படிக்க | Santhosh Narayanan: “ஆல் ஏரியாலையும் ஐயா கில்லி..”கானா முதல் காதல் இசை வரை அனைத்திலும் கலக்கும் ச.நா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ