அட்டகத்தி படத்தில் இயக்குநர் முதல் இசையமைப்பாளர் வரை எல்லாமே புதுமுகம்தான். அதில் இடம் பெற்றிருந்த “ஆடி போனா ஆவணி” என்ற பாடல் பலரது மனங்களை கவர்ந்தது. இந்த பாடலை பாடிய கானா பாலா மட்டும் பெரும் புகழ் பெறவில்லை, இதற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் இன்று எங்கோ சென்றுவிட்டார். பா.இரஞ்சித்தின் முதல் படைப்பான அட்டகத்தி, சந்தோஷ் நாராயணனுக்கு புது தொடக்கத்தை கொடுத்தது.
ச.நாவிற்கு பிறந்தநாள்!
தற்போது ட்ரெண்டிங்கிள் உள்ள இசையமைப்பாளர்களில் பல 2கே கிட்ஸிற்கு பிடித்தவர், சந்தோஷ் நாராயணன். இவரை ரசிகர்கள் செல்லமாக ச.நா (Sana) என்று அழைப்பதுண்டு. பார்ப்பதற்கு பெரிய பெரிய இசையமைப்பாளர்களுக்குதான் மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பது போல தெரியும். ஆனால் ச.நா போன்ற இசையமைப்பாளர்களுக்கு பின்னால் ஒரு படையே இருக்கிறது என சிறிது ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். பல Underrated படைப்பாளிகளில் முதன்மையானவர், நம்ம ச.நா.
ச.நா.இசையின் தனித்துவம்:
சந்தோஷ் நாராயணன் இடத்தில் பலருக்கு பிடித்த விஷயமே, இவரது பாடல்களில் உள்ள இசை மற்றும் குரலின் தனித்துவம்தான். அட்டகத்தி படத்தில் கிராமத்து சாயலுடன் தெளித்த இசை, அதவே பீட்ஸா படத்தில் சிறிது ரொமேன்ஸ் சிறிது ஹாரர் கலந்து இசை என படத்திற்கு படம் புதுமை காட்டுபவர் இவர். இவர் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலிற்கும் மெட்டு போடுவது மட்டுமன்றி, அந்த பாடலுக்கு தேவையான குரலை தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர். கானா பாலா, பிரதீப் குமார், லலிதா விஜயகுமார் உள்ளிட்ட பல கலைஞர்களை அந்த அந்த பாடல் வகைக்கு ஏற்றவாறு பாடவைத்தார். சூது கவ்வும் படத்திற்காக இவர் இசையமைத்த பி.ஜி.எம் இன்றளவும் பலரின் ரிங் டோனாக உள்ளது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை:
சினிமா-இசை வாழ்க்கையில் ஆரம்பம் முதலே ஹிட் கொடுத்து வரும் சந்தோஷ் நாராயணன், படிப்படியாக உயர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணிபுரியும் அளவிற்கு வளர்ந்தார். கபாலி படத்தில் இடம் பெற்றிருந்த மரண மாஸ் பாடலான “நெருப்புடா..” முதல் “மாய நதி இன்று” என்ற மெல்லிய காதல் பாடல் வரை அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் வெளியாகியிருந்த தசரா படத்தில் இவர் மியூசிக் போட்ட “மைனரு வேட்டி கட்டி” பாடல் பல ரசிகர்களை கவர்ந்தது. இப்படியே படிப்படியாக உயர்ந்த ச.நா, இப்போது பாலிவுட் படங்களுக்கு இசையமைக்கவும் ஆரம்பித்து விட்டார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘தி நைட் மேனேஜர்’ தொடரின் டைட்டில் சாங்கிற்கு சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்துள்ளார்.
ச.நா ஹிட்ஸ் சில!
“மோகத்திரை..” பீட்ஸா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலை பிரதீப் குமார் பாடியிருந்தார்.
“ஏய் சண்டகாரா..” இறுதி சுற்று படத்தில் தீ பாடிய பாடல் இது.
“வாடி ராசாத்தி..” 36 வயதினிலே படத்தில் லலிதா விஜயகுமார் பாடிய பாடல்.
“ஆகாயம் தீ பிடிச்சா..” மெட்ராஸ் படத்தில் பிரதீப் குமார் பாடிய பாடல் இது.
“ஆகாசத்த நான் பாக்குறேன்..”குக்கூ படத்தில் பிரதீப் குமார் மற்றும் பிரதீப் குமார் பாடிய பாடல்.
“மயக்கமா..கலக்கமா..”திருச்சிற்றம்பலம் படத்தில் அனிருத் இசையில் ச.நா பாடியிருந்த பாடல்.
“கண்டா வர சொல்லுங்க..” கரணன் படத்தில் கிடாக்குழி மாரியம்மாளுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல் இது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ