கடந்த ஒருவார காலமாக மெர்சல் படத்தின் ட்ரண்டிற்கு அடுத்து ட்விட்டரில் ட்ரண்ட் அடித்து வந்தது #ZeeTamilLogoMissing தான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சின்னதிரை பிரபலங்கள் முதல், கோலிவுட் பிரபலங்கள் வரை அனைவரும் இதுகுறித்த கேள்விகளுடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். 


ஏன் இந்த குழப்பமும், கேள்வியும்... 


சென்ற வாரம் முதல் ஜீ குடும்பதின் சேனல்களில் LOGO-க்கள் திரைகளால் மூடப்பட்டு "விரைவில் வருகிறது" என குறிப்பிட்டிருந்தது... இதனால் அனைவரும் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் #ZeeTamilLogoMissing என்ற Tag-னை ட்ரண்ட் ஆக்கினர்.


முன்னதாக #அழகானமாற்றம் என்ற டேகி-ல், ஜீ தொலைக்காட்சியும் வீடியோ ஒன்றினை பதிவிட்டது. இந்த வீடியேவில் வரும் பாவை, "ஒளியில் மாற்றம், ஒலியில் மாற்றம், அழகான மாற்றத்தின் தொடக்கம் விரைவில்.." என குறிப்பிட்டார். மேலும் அந்த வீடியோவில் தொலைகாட்சியின் LOGO காண்பிக்கப்படவில்லை. 


இதனையடுத்து, விரைவில் புது தோற்றத்துடன் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க ‘ஜீ குடும்பம்’ படையெடுக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஜீ குடும்பத்தின்’ சேனல்கள் புது பொலிவுடன் ஒலி, ஒளிபரப்பாகியது. 



(நன்றி : @zeetamil)


தற்போது துள்ளயமான காட்சிகள் மற்றம் ஒலிகளுடன் ஜீ குடும்பத்தின் சேனல்கள் ரசிகர்களுக்காக வந்துவிட்டது!